Lokesh Kanagaraj: கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தது.. அதை அடுத்த படங்களில் தவிர்க்க முயற்சி செய்கிறேன்- லோகேஷ் கனகராஜ் பேச்சு!
Lokesh Kanagaraj About Coolie Movie criticisms: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் இறுதியாக ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த படத்தின் மீது வந்த விமர்சனங்களை புது படத்தில் திருத்திக் கொள்வதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி விவரமாக பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kankagaraj) தமிழ் சினிமாவில் ஸ்ரீ (Sri) மற்றும் சந்தீப் கிஷனின் (Sundeep Kishan) நடிப்பில் வெளியான மாநகரம் (Maanagaram) என்ற படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். இந்த படமா இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் (Karthi) இணைந்தார். இவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படம்தான் கைதி (Kaithi). கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இந்த வெற்றியை அடுத்ததாக தளபதி விஜயின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான மாஸ்டர் (Master) என்ற படத்தை இயக்கியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற நடிகர்களை கொண்டும் திரைப்படங்களை இயக்க தொடங்கியிருந்தார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி நடிப்பில் கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியானது.
இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், வெளியான முதல் நாளிலே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிஸியான நிலையில், எந்த சந்திப்பிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், இப்படத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதையும் படிங்க: 2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!
கூலி திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் :
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில், மக்களிசை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், “நான் கூலி படத்திற்கு பிறகு பெரிதாக எந்த நேர்காணல் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை, எனது புது படத்தின் பணிகளில் பிசியாக இருந்தேன். மேலும் எனக்கும் சரியான மேடை கிடைக்கவில்லை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு. கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தது. பொதுவாகவே மக்களுக்காக ஒரு படத்தை கொடுக்கும்போது அதற்கான விமர்சனங்கள் வருவது சரிதான்.
இதையும் படிங்க: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் இறந்துவிடுமா? சுதா கொங்கரா பகிர்ந்த விஷயம்!
மேலும் நானும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, எனது அடுத்த படங்களில் அது நடக்காத அளவிற்கு முயற்சி செய்வேன். எல்லா விமர்சனங்களையும் கடந்து மக்கள் ரஜினிகாந்த் சாருக்காக அந்த படத்தை தியேட்டரில் பார்த்ததற்கும், நான் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டேன் அவர் கிட்டத்தட்ட இந்த படம் ரூ 500 கோடிகள் சம்பாதித்துள்ளது என கூறினார். இவ்வாறு வசூல் செய்ததற்கு மக்களின் ஆதரவே காரணம். அதனால் மக்களுக்கு நன்றி, மேலும் உறுதுணையாக இருந்த எல்லோருக்குமே நன்றி” என அதில் அவர் பேசியிருந்தார்.
லோகேஷ் கனகராஜின் டிசி படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வெளியிட்ட பதிவு :
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங்கும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.