Krithi Shetty: திரைப்படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா? – அசத்தல் பதிலளித்த க்ரித்தி ஷெட்டி!

Krithi Shetty About Luck In Cinema: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் க்ரித்தி ஷெட்டி. இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் தயாராகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது. அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இவர், படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமாக என்பது குறித்து பேசியுள்ளார்.

Krithi Shetty: திரைப்படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா? - அசத்தல் பதிலளித்த க்ரித்தி ஷெட்டி!

க்ரித்தி ஷெட்டி

Published: 

02 Jan 2026 18:32 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கிவருபவர் க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty). இவர் தனது 17வது வயதிலே கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். ராம் சரணின் (Ram Charan) பெடி (Peddi) படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனாவின் (Buchi Babu Sana) இயக்கத்தில் வெளியான உப்பேனா (2021) (Uppena) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் அவர் தொடர்ந்து நடித்த தெலுங்கு படங்கள் இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை, இதனை அடுத்ததாக தென்னிந்திய சினிமா பக்கம் வந்த இவருக்கு, மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை கொடுத்த படம்தான் ஏ.ஆர்.எம் (ARM). கடந்த 2024ல் வெளியான இப்படத்தில் நடிகர் டோவினோ தாமஸுக்கு (Tovino Thomas) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

அந்த வகையில் தமிழில் வா வாத்தியார் (Vaa Vaathiyaar), லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) மற்றும் ஜீனி (Genie)போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த 3 படங்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா? என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்… தகாத வார்த்தைகளால் சண்டை!

படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமாக என்பது குறித்து க்ரித்தி ஷெட்டி பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் நடிகை க்ரித்தி ஷெட்டியிடம் தொகுப்பாளர் முதலில், “சினிமாவில் உங்களின் ஆசை என்னது ?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த க்ரித்தி ஷெட்டி, “எனக்கு பிடித்த ஹீரோக்களுடன் உடனடியாக நடித்துவிடவேண்டும். அப்போதுதான் எனக்கு பதற்றம், பயமும் குறையும். இதுதான் எனது ஆசை” என தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம், “சினிமாவில் படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா ?” என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: D 54 படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!

அதற்கு அவர், “படங்கள் வெற்றிபெற அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம், பல நேரங்களில் கைகொடுக்காமலே போகலாம். எனவே படங்களின் தோல்விக்கு அதிர்ஷ்டம் மீது பழிபோட கூடாது. அந்த படத்திற்காக இன்னும் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றி யோசிக்கவேண்டும். அதுவே வெற்றிக்கு வழியாக இருக்கும்” என க்ரித்தி ஷெட்டி வெளிப்படையாக பேசியிருந்தார்.

நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை க்ரித்தி ஷெட்டியின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் தயாராகி வெளியாகாமல் இருக்கிறது. அதில் கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் என்ற படமானது கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகவேண்டியது. பின் தயாரிப்பாளரின் பிரச்சனை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவரின் 3 தமிழ் படமான வா வாத்தியார், ஜீனி மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி