Krithi Shetty: பிரதீப் ரங்கநாதன் கூட இருந்தாலே பாசிட்டிவ் வைப்தான் – கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்!

Krithi Shetty On Pradeep Ranganathan: கீர்த்தி ஷெட்டி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் இளம் நடிகையாக இருந்துவருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் மிக பிரம்மாண்ட படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் நடிக்கும்போது பிரதீப் ரங்கநாதனுடன் இருந்த அனுபவம் குறித்து இவர் தெரிவித்துள்ளார்.

Krithi Shetty: பிரதீப் ரங்கநாதன் கூட இருந்தாலே பாசிட்டிவ் வைப்தான் - கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்!

கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரதீப் ரங்கநாதன்

Published: 

25 Nov 2025 20:18 PM

 IST

பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டியூட் (Dude). இந்த படத்தி அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN) இயக்க, பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சைன்ஸ் பிக்க்ஸன் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா (SJ. Suryah)மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய கீர்த்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதனுடன் LIK படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்னமாலா..ரத்னமாலா..! வெளியானது சிவகார்த்திகேயனின் பராசக்தி பட செகண்ட் சிங்கிள்..!

பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்த நடிகை கீர்த்தி ஷெட்டி :

அந்த நேர்காணலில் கீர்த்தி ஷெட்டி, ” நான் LIK பட ஷூட்டிங்கின்போது கவனித்ததில், பிரதீப் ரங்கநாதன் சாரின் முடிவுகள் எப்போதும் தெளிவாகவும் மற்றும் சிறப்பாகவும் இருக்கும். மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசரில் அனிருத் சாரின் “எனக்கென யாருமில்லையே” என்ற பாடலை பயன்படுத்தலாம் என்ற ஐடியாவை கொடுத்தவரும் அவர்தான்.

இதையும் படிங்க: தேரே இஷ்க் மே படம் என்னை மிகவும் பாதித்தது… நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த விஷயம்!

அவர் கணித்தபடியே இந்த பாடலும் அந்த டீசரில் சிறப்பாகவே செட் ஆனது. மேலும் ஷூட்டிங்கின் பொது பிரதீப் ரங்கநாதன் சார் எப்போதும் சிரித்தமுகத்துடனே இருப்பார். மேலும் வர இயல்பாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சுற்றி ஒரு பாசிட்டிவ் வைப்பை உருவாக்கிவிடுவார்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட 2வது பாடல் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு :

லவ் இன்சூரன் கம்பெனி படமானது கிட்டத்தட்ட 2 முறைக்கும் மேல் ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே இருந்தது என்றே கூறலாம். இந்த படமானது கடந்த சில மாதங்களுக்கும் முன்னே தயாரான நிலையில், வியாபாரம் தொடர்பாக இவ்வளவு நாள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது . தற்போது இருதியாக வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தத்க்கது.

Related Stories
இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷாபாஷ் மித்து – எந்த ஓடிடியில் பார்க்கலாம்
ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் இந்த சிறுமி இப்போ ஸ்டார் நடிகை… யார் தெரியுமா?
Krithi Shetty: நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை.. அந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் – கீர்த்தி ஷெட்டி!
உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்
மகாநதி படத்திற்கு பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. 6 மாதம் சும்மாதான் இருந்தேன்- கீர்த்தி சுரேஷ்பேச்சு!
சூர்யாவின் 47வது படத்தின் ஷூட்டிங் பூஜை எப்போது? ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் தகவல்!
பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..