Youth Movie: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. யூத் திரைப்பட ‘ஆச புள்ள’ பாடல் வெளியீடு!

Aasa Pulla Song: தமிழில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், தற்போது 3வது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Youth Movie: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. யூத் திரைப்பட ஆச புள்ள பாடல் வெளியீடு!

யூத் திரைப்பட ஆச புள்ள பாடல்

Updated On: 

28 Feb 2026 18:02 PM

 IST

கோலிவுட் சினிமாவில் தற்போது இளம் இயக்குநர் மற்றும் கதாநாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் கென் கருணாஸ் (Ken Karunas). இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் “யூத்” (Youth). இப்படத்தை பர்வதா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில், கென் கருணாஸின் குரலில் இப்படத்திலிருந்து முதலாக வெளியான பாடல்தான் முட்ட கலக்கி (Mutta Kalakki). சில நாட்களுக்கு முன் வெளியாகி இந்த படலானது தற்போது ட்ரென்டிங் பாடல்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டாவது காதல் படலானது வெளியாகியிருந்தது. இதுவும் இணையத்தில் ரசிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது 3வது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பாடலின் வரிகளை கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தனலட்சுமி இருவரும் இணைந்து எழுதியிருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். தற்போது இவரின் குரலில் வெளியாகியுள்ள “ஆச புள்ள” (Aasa Pulla) என்ற 3வது பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி என்னாச்சு? போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பும் சூர்யா ரசிகர்கள்

கென் கருணாஸின் யூத் திரைப்படத்தின் 3வது பாடல் குறித்து வெளியாகியுள்ள பதிவு:

பிரம்மாண்ட படங்களுடன் மோதும் யூத் :

இந்த யூத் படத்தில் கென் கருணாஸுடன் நடிகர்கள் சூரஜ் வெஞ்சாரமூடு, பிரியதர்ஷினி, அனிஷிமா அனில்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பள்ளிப்பருவ காதல் மற்றும் மிடில்கிளாஸ் குடும்பம் பற்றிய கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வங்கியுள்ளதாகவும், சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படமானது கிட்டத்தட்ட ரூ 6 முதல் 8 கோடி பட்ஜெட்டில் தயார்க்கியுள்ளதாக வட்டரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: மறைந்த அந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை – பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

இப்படமானது வரும் 2026மச்சர் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் வெளியாகும் அதே தேதியில் யாஷின் டாக்சிக் திரைப்படமும், ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படமும் உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் நிச்சயம் வசூல் ரீதியாக யூத் படம் பாதிப்பை சந்திக்க நேரிடும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் .

Follow Us
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்