டியூட் பட டைட்டிலுக்கு காரணம் .. இயக்குநர் கீர்த்திஸ்வரன் சொன்ன சீக்ரெட்!

Keertheeswaran About Dude Movie Title:தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் டியூட் படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு டியூட் என்ற டைட்டில் வைப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

டியூட் பட டைட்டிலுக்கு காரணம் .. இயக்குநர் கீர்த்திஸ்வரன் சொன்ன சீக்ரெட்!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்திஸ்வரன்

Published: 

13 Oct 2025 13:01 PM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் இதுவரை 2 படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குநராக நுழைந்த இவர், தற்போது ஹீரோவாக சினிமாவில் கலக்கிவருகிறார். அந்த வகையில், இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon). இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த நிலையில், ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக விக்னேஷ் சிவனின்(Vignesh Shivan) லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) மற்றும் இயக்குநர் கீர்த்திஸ்வரனின் (Keerthiswaran) டியூட் (Dude) என இரு படங்களிலும் ஒப்பந்தமானார். இதில் டியூட் படம் இந்த 2025 தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் அதிரடி காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒண்றில் பேசிய இயக்குநர் கீர்த்திஸ்வரன், டியூட் என்ற டைட்டில் வைப்பதற்கான காரணம் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: எனது மறக்கமுடியாத தீபாவளி ரிலீஸ் படங்கள் அதுதான்- பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

டியூட் என டைட்டில் வைப்பதற்கான காரணம் பற்றி பேசிய இயக்குநர் கீர்த்திஸ்வரன்:

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் இயக்குநர் கீர்த்திஸ்வரனிடம், நீங்கள் ஏன் டியூட் என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்தீர்கள்? அதற்கான காரணம் என்ன ?என்பது பற்றி கேள்விங்களை கேட்டார். அதற்கு பதிலளித்த கீர்த்திஸ்வரன், “இந்த படத்திற்கு டியூட்-ன்னு டைட்டில் வைப்பதற்கான காரணம் பான் இந்திய பிரபலம், மக்களை ஈர்ப்பதற்காக என்பதுதான் உண்மை. இந்த டைட்டிலை வைப்பதற்கு அடிப்படை என்னவென்றால் விளம்பரப்படுத்துவதற்காகத்தான்.

இதையும் படிங்க: அதர்வாவின் இதயம் முரளி படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

ரசிகர்கள் மத்தியில் இந்த டைட்டில் பிரபலமாகி, அவர்களை இப்படத்திற்காக ஈர்ப்பதற்காகத்தான் டியூட் என்ற டைட்டிலை வைத்தோம். அதை தொடர்ந்த இப்படத்தின் கதையில், பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரத்திற்கு என்ற ஒரு ஜானர் இருக்கிறது. இந்த டைட்டிலும் இப்படத்தின் கதையோடு ஒன்றிபோகும். மேலும் டியூட் என்ற டைட்டிலை இருபாலினம் டைட்டிலாகத்தான் பார்க்கிறேன்” என இயக்குநர் கீர்த்திஸ்வரன் தெரிவித்திருந்தார்.

டியூட் படத்தின் புதிய போஸ்டர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

மமிதா பைஜூ மற்றும் பிரதீப் ரங்கநாதனின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இதில் இவர்களுடன் நடிகர்கள் ரோகிணி, சரத்குமார், ஹிருது ஹூரன் உட்பட பல்வேறு பிரபலங்ககள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக ப்ரீ புக்கிங் வரும் 2025 அக்டோபர் 14 அல்லது 15ம் தேதியில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.