Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karthik Subbaraj : தனுஷிற்காக அந்த ஓப்பனிங் சீன் எழுதவில்லை – கார்த்திக் சுப்பராஜ்!

Karthik Subbaraj About Jagame Thandhiram : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் அறிமுக காட்சி அவருக்காக எழுதவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Karthik Subbaraj : தனுஷிற்காக அந்த ஓப்பனிங் சீன் எழுதவில்லை – கார்த்திக் சுப்பராஜ்!
தனுஷ் Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 29 Jun 2025 08:14 AM

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியை சூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறது. இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீசா (Pizza)  என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக நுழைந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi)  கதாநாயகனாக நடித்திருந்தார். அதிரடி நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படமாக இந்த படமானது வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து ஜிகர்தண்டா (Jigarthanda)  என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) . இந்த படத்தில் தனுஷ்  (Dhanush) முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lakshmi) கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது ஓடிடியில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேட்டி ஒன்றில் , “இப்படத்தில் தனுஷின் ஓப்பனிங் காட்சிகள், அவருக்காக எழுதப்படவில்லை” என்று ஓபனாக பேசியுள்ளார். அது என்ன என்பதைப் பறி பார்க்கலாம்.

தனுஷ் அறிமுக காட்சி பற்றி கார்த்திக் சுப்பராஜ் பேச்சு :

அந்த நேர்காணலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் சாருக்கு ஒரு ஓப்பனிங் காட்சி இருக்குமே, அது நான் உண்மையாக ஜிகர்தண்டா 1ல் படத்தில் பாபி சிம்ஹவின் கதாபாத்திரத்திற்கு எழுதினேன். ஜகமே தந்திரம் படத்தில் முதல் ஓப்பனிங் காட்சியில், தனுஷ் சார் ட்ரெயினை நிறுத்தி, அதற்கு வில்லனை அடித்து சண்டை போடுவார். அந்த காட்சியை நான் முதலில் ஜிகர்தண்டா படத்தில் பயன்படுத்த நினைத்தேன். ஆனால் ஜிகர்தண்டா படத்தில் என்னால் அவ்வாறு பாபி சிம்ஹவிற்கு எடுக்கமுடியவில்லை. ஆனாலும் ஜிகர்தண்டா அப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ நன்றாக அமைந்திருந்தது. சாதாரணமாக ஒரு கதாபாத்திரம் எவ்வாறும் படத்தில் வருவதுபோல் மாஸ் காட்டியிருந்தது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு அமைந்திருந்ததோ. அதை போலத்தான். ஜிகர்தண்டா 1ல் அந்த காட்சியை எடுக்காமலே நன்றாகத்தான் வந்திருந்தது. ஒருவேளை, தனுஷின் அறிமுக காட்சியைப் போல, ஜிகர்தண்டா 1ல் நான் எடுத்திருந்தால் நிச்சயமாக அந்த படத்தில் நன்றாக வந்திருக்காது” என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபனாக பேசியிருந்தார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.