விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது – காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

Thalapathy Vijay's Jana Nayagan Audio Launch: மலேசியாவில் நடைபெற்று வரும் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது - காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது

Updated On: 

27 Dec 2025 20:59 PM

 IST

மலேசியாவில் நடைபெற்று வரும் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமான ஜனநாயகன் (Jana Nayagan)இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு மலேசிய அரசு தடை விதித்திருந்த நிலையில், ரசிகர் ஒருவர் தவெக கட்சியைக் கொடியை தூக்கி பிடித்தபடி இருந்தார். இந்த போட்டோ வைரலான நிலையில் அந்த ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார் என  தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27, 2025 அன்று நடைபெற்றது. முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்ந்தோ அல்லது அரசியல் கருத்துகள் பேசக்கூடாது எனவும் அது சார்ந்த பொருட்கள் எடுத்து வரக்கூடாது என விழா ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க : Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

இந்த நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் விஜய்யின் தவெக கட்சிக் கொடியை தூக்கி பிடித்தபடி இருந்தார்.  இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் விதமாக மலேசியா போலீசார் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விஜய் மேடையேறிய போது ரசிகர்கள் அவரைப் பார்த்து டிவிகே டிவிகே என சத்தமிடத் தொடங்கினர். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்களைப் பார்த்து இங்கே வேண்டாம் அமைதியாக இருங்கள் என்பது போல கையசைத்தார். இது தொடர்பான வீடியோ வும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9, 2026 பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற தகவல் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மேலும் ஒரு பாடல் இருப்பதாக பாடலாசிரியர் விவேக் அப்டேட் வழங்கினார்.

உடலை கல்லாக மாற்றக்கூடிய கொடிய நோய்.. 7 வயது சிறுமியின் வேதனை கதை
இனி அனுமதியளிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக லக்கேஜ்களுக்கு இனி அபராதம் - இந்திய ரயில்வே அதிரடி
தங்கையின் திருமணத்துக்கு பிச்சைக்காரர்களை விருந்தினராக அழைத்த அண்ணன் - வைரலாகும் வீடியோ
சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ