நடிகர் சூரி குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர்கள் மாரி செல்வராஜ் – லோகேஷ் கனகராஜ்
Maaman Movie: முன்பு எல்லாம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒருவர் அறிமுகம் ஆனால் இறுதி வரை அவர் காமெடி படங்களில் மட்டுமே நடித்து தங்களது சினிமா வாழ்க்கையை முடித்து விடுவார்கள். ஆனால் தற்போது காமெடி நடிகர்கள் தொடர்ந்து கதையில் நாயகன்களாகவும் தங்களை நிரூபித்து வருகின்றனர். இதனை சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம்.

நடிகர் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்துள்ள நிலையில் அவரது வளர்ச்சி குறித்து இயக்குநர்கள் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) மற்றும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இருவரும் பட விழாவில் நெகிழ்ந்து பேசியது தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தனக்கான இடத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக மட்டுமே வலம் வந்த நடிகர் சூரியை விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் கதையில் நாயகனாக அறிமுகம் செய்து அழகு பார்த்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இது வெற்றிமாறன் சூரியின் சினிமா வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய மாற்றம் ஆகும்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த கொட்டுக்காளி, கருடன், விடுதலை பாகம் 2 படங்கள் வெளியாகி வெற்றி அடைந்தது பிறகு அவரை தமிழ் சினிமாவின் நாயகன் அந்தஸ்தை மிகவும் இறுக்கமாக பிடித்துக்கொண்டார் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூரி எழுத்தில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் தற்போது உறுவாகியுள்ள படம் மாமன். இந்தப் படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் தாய் மாமன் மற்றும் மச்சான் இடையே இருக்கும் உறவை இந்தப் படம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி திரையாங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் நடிகர் சூரி குறித்து இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ந்து பேசியது தற்போது கவனம் பெற்று வருகின்றது.
சூரி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது:
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது, எனக்கும் சூரி அண்ணனுக்கும் இடையே உள்ள உறவு ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த உணர்வு தான். நான் இயக்குநராக வருவதற்கு முன்பு இருந்தே சூரி அண்ணனோடு பழக்கம் உள்ளது.
நானும் அவரும் நிறைய இரவுகள் ஒன்றாக பேசி இருக்கேம் விளையாடி இருக்கோம். அப்போ சூரி அண்ணனுக்கும் சினிமா வாழ்க்கையில் சற்று சிக்கலானதாக இருந்தது. அவரது காமெடி படங்களில் ஒர்க்காகவில்லை என்று அவரை விமர்சிக்க தொடங்கிய காலம். ஆனால் அவரது உடல் மொழியை பார்த்த எனக்கு இவர் காமெடி மட்டும் இல்லை பெரிய நடிகராக வேண்டிய எல்லா தகுதியும் இவர்கிட்ட இருக்குனு நான் நினைச்சு இருக்கேன்.
இப்போ சூரிய் அண்ணனோட இந்த வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு. அவர் இந்தப் படத்திற்கு கதை எழுதி கொடுத்து நடித்ததில் இன்னும் பெருமையாக இருக்கு என்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சூரி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது:
மாமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் மக்கள் தற்போது லைட் ஹார்டர்ட் படங்களை தியேட்டரில் பார்க்க ஆசைப்படும் நிலையில் இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப்பெரும் என்று தெரிவித்தார்.
மேலும் சூரி மாதி ஒரு ஆளின் வெற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதககவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்து சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிலையில் அங்கு கதை சொல்ல வரும் இயக்குநர்களில் 10-ல் 5 பேர் நடிகர் சூரிக்காக கதையை எடுத்து வருகிறார்கள் என்றும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.