அப்போ சிம்பு சொன்ன இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனா? வைரலாகும் பிரசன்னா பேசிய வீடியோ
Actor Silambarasan: முன்னதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்தப் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்தப் படம் படு தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இடையே பல பிரச்னைகள் வந்தது என்றும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் புது பெஞ்ச் மார்க்கை செட் செய்தவர் டி.ராஜேந்தர். சினிமாவில் தான் வேலை செய்யாத துறையே இல்லை என்ற வராற்றை பதிவு செய்யும் விதமாக இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என ஒரு ரவுண்டுகட்டி சாதித்தவர் டி.ராஜேந்தர். இவரது மூத்த மகன் தான் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவரை 3 வயது இருக்கும் போதே சினிமாவிற்கு டி.ராஜேந்தர் தத்து கொடுத்ததாக கூறுவார்கள். அப்படி பால்குடி மாறாத வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சிம்பு. புலிக்கு பொறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப தந்தைக்கு சற்றுக் குறையாமல் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என அனைத்திலும் தனது பெயரை பதித்துள்ளார் நடிகர் சிம்பு. 1984-ம் ஆண்டு முதல் 2025-ம் வரை தன்னை சினிமாவில் நிலைநிறுத்தியுள்ளார்.
தனது தந்தை இயக்கத்தில் வெளியான உறவைக்காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2002-ம் ஆண்டு இவரது தந்தை டி.ராஜேந்தர் தயாரித்து இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக உள்ள ஹரி, துரை, கௌதம் வாசுதேவ் மேனன், தரணி, விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், மணிரத்னம், சுந்தர் சி, சுசீந்திரன், வெங்கட் பிரபு என பலரது இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிலம்பரசனே இயக்கி சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் நடித்துள்ளார் நடிகர் சிலம்பரசன். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்சிகளிலு கலந்துகொண்டபோது சிம்புவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில், தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கிற்கு மட்டும் சரியாக சென்றுள்ளீர்கள் மணிரத்னம் மீது பயமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த மாதிரியான கேள்வி எழுப்ப காரணம் நடிகர் சிலம்பரசன் சரியாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை என்று முன்னதாக பல வதந்திகள் அவர் மீது பரப்பப்பட்டது. இது குறித்து பேசிய நடிகர் சிம்பு மணிரத்னம் சாருக்கு ஒரு நடிகரை எப்படி நடத்த வேண்டும் என்றும் ஷூட்டிங்கிற்கு வரும் போது என்ன எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருப்பார்.
நடிகரின் கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தவும் சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்கவும் மணிரத்னம் உறுதி செய்வார். மற்ற இயக்குநர்கள் மாதிரி ஷூட்டிங்கிற்கு நடிகர் வந்தாலும் வராமல் இருப்பது அல்லது ஷூட்டிங் வந்து கதையை இப்படி எடுக்கலாம அப்படி எடுக்கலாமா என்று அவர் யோசிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
View this post on Instagram
நடிகர் சிம்பு எந்த இயக்குநரை அப்படி சொன்னார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை தான் அப்படி கூறியுள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக நடிகர் பிரசன்னாவின் பேச்சு உள்ளது. சமூபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாரின் மச்சானாக நடிகர் பிரசன்னா நடித்திருந்தார். சமீபத்தில் படத்தின் விழா ஒன்றில் பேசிய பிரசன்ன இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு கடைசி வரைக்கு ஆதிக்கின் ஃபிலிம் மேக்கிங்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
என்னையா எடுக்குறீங்கனு இருக்கு. ஏன்ன ஒரு சீன இப்படி தான் எடுக்கனும்னு முடிவு பன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரமாட்டார். ஸ்பாட்ல நிறைய நேரக் டயலாக்கை மாத்திடுவார். குட் பேட் அக்லியில் வரும் புன்னகை அரசி டயலாக் எல்லாம் சொல்ல சொன்னார். எனக்கு சுத்தமா புரியல என்னையா இது டயலாக்னு எனக்கு சுத்தமா ஈடுபாடே இல்லாமல் தான் சொன்னேன் என்றும் நடிகர் பிரசன்ன அந்த விழாவில் பேசியுள்ளார்.
இதன் காரணமாக நடிகர் சிம்பு முன்னதாக பேசியது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனைதான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.