சூர்யாவின் அந்த படத்தைப் பார்த்துவிட்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டேன் – இயக்குநர் வெற்றிமாறன்
Director Vetrimaran: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் சூர்யாவின் படத்தைப் பார்த்துவிட்டு தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaran) கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், முரளி, பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் என பலர் நடித்திருந்தனர். ஒரு பைக்கிற்கும் இளைஞருக்கும் இடையே இருக்கும் பிணைப்பை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படம் வெளியான போது இளைஞர்கள் உட்பட பலரும் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 மற்றும் விடுதலை பாகம் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்களில் நடிகர் தனுஷ் தான் நாயகனாக நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடித் தீர்த்தனர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக விடுதலை பாகம் இரண்டு படம் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, சேத்தன் மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் முதல் பாகத்தில் இருந்து இரண்டாவது பாகத்திலும் நடித்தனர்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன் ஆகியோர் இரண்டாவது பாகத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டபோது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவின் நடிப்பில் வெளியான படத்தைப் பார்த்துவிட்டு தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் தான் புகைப்பிடிக்கும் பழக்கதை விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அன்றில் இருந்து தற்போது வரை அவர் புகைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.