Mariselvaraj : வேட்டுவம் பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.. உருக்கமாக பதிவிட்ட மாரி செல்வராஜ்
Vettuvam film accident And Mari Selvaraj Condoles : இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வேட்டுவம். இப்படத்தின் ஷூட்டிங், நாகை மாவட்டத்தில் நடந்துவந்த நிலையில், கார் விபத்தில் ஸ்டாண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த மரணம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ்
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith). இவரின் இயக்கத்தில் ஆர்யா (Arya), அட்டகத்தி தினேஷ் (Dinesh) மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம்தான் வேட்டுவம் (Vettuvam). இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நாகை மாவட்டத்தில் நடந்துவந்த நிலையில், நேற்று 2025, ஜூலை 13ம் தேதியில் இந்த ஷூட்டிங்கில் கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (Stunt Master Mohanraj) என்பவர் உயிரிழந்துள்ளார். வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது, கார் ஸ்டண்ட் (Car stunts) செய்யும் காட்சியின்போது இந்த விபத்து நடந்துள்ளது. காரை வேகமாக ஓட்டிச்சென்று, மேடான இடத்தில் விழுந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்பிற விழுந்து விபத்து நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த விபத்தின் காரணமாக, தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நாகை மாவட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் உயிரிழப்பிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி
இணையத்தில் வைரலாகும் வேட்டுவம் பட கார் விபத்து வீடியோ :
On Cam: Stunt master SM Raju dies while performing high-risk car toppling stunt during film shoot in Tamil Nadu.#PaRanjith pic.twitter.com/jRZDRHK9w0
— Global__Perspectives (@Global__persp1) July 14, 2025
வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர் சங்க தலைவர் விஷாலும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷூட்டிங்கின்போது நடந்த எதிர்பாராத விபத்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : திருமணத்தில் நம்பிக்கை இல்லை.. மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் :
சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும்… pic.twitter.com/zr9sInLrt6
— Mari Selvaraj (@mari_selvaraj) July 14, 2025
அதில் இயக்குநர் மாரி செல்வராஜ் , சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜின் அண்ணனின் மரணம், இதயத்தில் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்றும். மேலும் வாழை படத்தில் இறுதிக் காட்சியில் லாரியை கவிழ்த்திய காட்சியில் துணிச்சலாகச் செயல்பட்டது குறித்தும், நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.