நடிகர் ஹரிஷ் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர் வெளியிட்ட டீசல் படக்குழு!

Harish Kalyan Birthday Special: கோலிவுட் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வரும் நிலையில் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்... போஸ்டர் வெளியிட்ட டீசல் படக்குழு!

டீசல்

Published: 

29 Jun 2025 13:45 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Actor Harish Kalyan). தமிழ் சினிமாவில் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் என இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்று 29-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து வரும் டீசல் படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது

டீசல் படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு போஸ்டர் இதோ:

நடிகர் ஹரிஷ் கல்யாணின் சினிமா பயணம்:

தமிழ் சினிமாவில் தான் அறிமுகம் ஆன படத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். முதல் படம் சர்ச்சைக்குரிய படமாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் கொடுக்கவில்லை.

2010-ம் ஆண்டு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 2017-ம் ஆண்டு வரை வரிசையாக படங்களில் நடித்தும் படம் எதுவும் வெற்றியடையவில்லை. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் ஹரிஷ் கல்யாண் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார். அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் இணைந்து போட்டியிட்ட நடிகை ரைசா வில்சனுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் ஹரிஷ் கல்யாண்.

இந்தப் படம் ரசிகர்களிடையே வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது வழக்கமாக மாறியது என்றே சொல்லலாம். அப்படி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

Related Stories
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!