Sai Abhyankkar: பல்டி’ படத்திற்காக சாய் அபயங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sai Abhyankkars salary In Baldi Movie: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி மலையாள சினிமாவிலும் கெத்து காட்டிவருபவர் சாய் அபயங்கர். மலையாள சினிமாவில் இவரின் முதல் படமாக உருவாகியிருப்பது பல்டி. இந்த படத்திற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதை, அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sai Abhyankkar: பல்டி படத்திற்காக சாய் அபயங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சாய் அபயங்கரின் பல்டி படம்

Published: 

25 Sep 2025 22:31 PM

 IST

தமிழில் ஆரம்பத்தில் தனி பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நெருக்கமானவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). கடந்த 2024ம் ஆண்டு வெளியான கட்சி சேர (Katchi Sera) என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து, ஆச கூட, சித்தரபுத்திரி மற்றும் விழி வீக்குற போன்ற பாடல்களை இசையமைத்துள்ள மற்றும் பாடியும் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் (Benz) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்தான் பல்டி (Balti). இந்த படத்தில் ஷேன் நிகம் (Shane Nigam) மற்றும் சாந்தனு இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக இவர் சுமார் ரூ 2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். இது பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் உறுதி படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : யூடியூபில் புதிய சாதனை படைத்த கோல்டன் ஸ்பாரோ பாடல் – ரசிகர்களிடையே கவனம் பெறும் படக்குழு வெளியிட்ட போஸ்ட்

மலையாள சினிமாவில் அதிக சம்பளம் பெற்ற சாய் அபயங்கர்

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலே சுமார் ரூ 2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். இது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளரே தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலே, அதிகம் சம்பளம் பெற்றவராக சாய் அபயங்கர் உள்ளார்.

இதையும் படிங்க : அருண் விஜய்யின் ரெட்ட தல எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ்!

இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது இளம் வயதிலேயே இசையமைப்பாளராக சுமார் ரூ 2 கோடியை சம்பளமாக பெற்றாரா? என மக்கள் தங்களின் ஆச்சரியத்தை தெரிவித்து வருகின்றனர்.

பல்டி படம் குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

சாய் அபயங்கரின் இசையமைப்பில் உருவாகும் புதிய படங்கள் :

லோகேஷ் கனகராஜின் பென்ஸ் படத்தை தொடர்ந்து சாய் அபயங்கர், பல படங்ககளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சிலம்பரசன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார். ஆனால் இப்படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர் டியூட், மார்ஷல், சூர்யாவின் கருப்பு போன்ற படங்களுக்கு இணையமைத்து வருகிறார். மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இசையமைக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் SK24 படத்திற்கு இவர் இசையமைப்பதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.