Anirudh Ravichander : மதராஸி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்.. வைரலாகும் பதிவு!

Anirudh X Post Viral : நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், இன்று 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வெளியாகியிருக்கும் படம் மதராஸி. இந்த படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இப்படத்திற்கு நன்றி தெரிவித்து அனிருத் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anirudh Ravichander : மதராஸி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்.. வைரலாகும் பதிவு!

மதராஸி படக்குழு

Published: 

05 Sep 2025 20:35 PM

 IST

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இந்த படத்தை தமிழ் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அனிருத் (Anirudh)தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்துடன் இன்று 2025 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : லோகா படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த துல்கர் சல்மான்!

மதராஸி படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து அனிருத் வெளியிட்ட எக்ஸ் பதிவு

இந்த பதிவில் அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ருக்மிணி வசந்த் , வித்யுத் ஜாம்வால் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

மதராஸி படம் எப்படி இருக்கு?

மதராஸி படமானது முழுமையாக ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் வேடங்களில் நடிக்க தொடங்கியிருந்த நிலையில், இந்த மதராஸி படத்தில் முழுமையாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம், கஜினியில் சூர்யாவின் கதாபாத்திரத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்தின் கதாபாத்திரம்  மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்த வித்யுத் ஜாம்வாலின் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்குகள் அதிர்ந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.