Ajith Kumar : நியூ லுக்கில் அஜித் குமார்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ!

Ajith Kumars New Look Video : கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் சமீப காலமாக கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்திருக்கும் அஜித், புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar : நியூ லுக்கில் அஜித் குமார்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ!

அஜித் குமார்

Updated On: 

13 Jun 2025 18:05 PM

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாக வலம்வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நிலையில், மேலும் கார் ரேஸ் (Car Race) பந்தயத்திலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக இறுதியாக வெளியானது குட் பேட் அக்லி (Good Bad Ugly). இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியான இப்படமும் உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வந்தார். இப்படங்களின் ஷூட்டிங்கும் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மதத்திலேயே நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து முழுவதுமாக கார் ரேஸ் பந்தயத்தில் இணைந்தார் அஜித் குமார். இந்நிலையில், பிரான்சில் நடைபெறவுள்ள கார் ரேஸ் போட்டிக்கு அஜித் பயிற்சி பெற்று வந்த நிலையில், தற்போது அவர் சென்னைக்கு (Chennai) வந்துள்ளார். கருப்பு நிற கோட் ஷூட்டிங் ஆளே வித்தியாசமாக இருக்கும் அவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமாரின் வைரலாகும் வீடியோ :

அஜித்தின் கார் ரேஸ் சாதனை :

நடிகர் அஜித் குமார் இந்தியாவின் சார்பாகக் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற்ற ஜிடி-24 கார் ரேஸ் பந்தயத்தில், தனது அணியுடன் கலந்துகொண்டார். இந்த போட்டியில் நடிகர் அஜித்தின் அணி 3வது இடத்தினை பெற்ற வெற்றி பெற்றது. இந்த போட்டியைத் தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற ஜிடி- 24 கார் ரேஸிலும் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு 3வது இடத்தை பிடித்தார்.

இந்த போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெற்ற ரேஸிலும் 2வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் குமார் இந்த 3 வெற்றிக் கோப்பைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த போட்டிகளைத் தொடர்ந்து மேலும் பிரான்சில் நடைபெறவுள்ள கார் ரேஸிலும் அஜித்தின் அணியானது கலந்துகொள்ளவுள்ளது. இந்த போட்டிக்காகத் தீவிர பயிற்சியில் அஜித்தும் இருந்து வருகிறார்.

அஜித்தின் 64வது படம் ;

அஜித்தின் 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக கேஜிஎப் படப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஷூடிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இரு குறித்தன அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.