Ajith Kumar: கார் ரேஸ் களத்தில் அஜித் குமார்.. ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் போட்டோஸ்!

Ajith Kumar With His Family: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பார்சிலோனாவில் நடைபெறும் கார் ரேஸின்போது , தனது குடும்பத்துடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar: கார் ரேஸ் களத்தில் அஜித் குமார்.. ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் போட்டோஸ்!

குடும்பத்துடன் நடிகர் அஜித் குமார்

Updated On: 

27 Sep 2025 20:56 PM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இப்படமானது கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநரும், நடிகர் பிரபுவின் மருமகனுமாகிய ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்தாக அஜித் குமார் AK64 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குநர் அதிக ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார். இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் இருந்து முழுவதுமாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை கிட்டத்தட்ட 4ம் மேற்பட்ட கார் ரேஸ் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் பார்சிலோனாவில் (Barcelona) நடைபெற்றுவரும் கார் ரேஸ் போட்டியிலும் தனது அணியினருடன், இந்தியாவின் சார்பாக கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் கலந்துகொண்டு வருகிறார். இந்த கார் ரேஸின்போது, தனது குடும்பத்துடன் அஜித் குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இமையே… இமையே… 12 ஆண்டுகளை நிறைவு செய்தது அட்லியின் ராஜா ராணி படம்

இணையத்தில் வைரலாகும் அஜித் குமார் மற்றும் அவர் குடும்பம் இருக்கும் புகைப்பட பதிவு :

அஜித் குமாரின் புதிய படம் :

அஜித் குமரன் 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ரோமியோ பிக்ச்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். மேலும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் ஐசியமித்திருந்தஹ் நிலையில், இந்த AK64 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

மேலும் புதிய படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறேது. மேலும் நடிகை அஞ்சலி மற்றும் ஸ்வாசிகா போன்ற நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமாரின் 65 படத்தை இயக்குபவர் யார் :

அஜித் குமரன் AK64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில், அஜித் 65வது படத்தய் மலையாள இயக்குனர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, உன்னி முகுந்தனின் மார்கோ படத்தை இயக்கிய இயக்குநர் ஹனீஃப் அடேனிதான்.

இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான மார்கோ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது அதிக வன்முறை காட்சிகளுடன் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து, அஜித் குமாருடன் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை .