Samantha Ruth Prabhu : மீண்டும் ஹீரோயின் கேரக்டரில் நடிப்பேனா..? நடிகை சமந்தா விளக்கம்!
Samantha About Production Company : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல பிஸினஸை நடத்திவருகிறார். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் படங்களில் மீண்டும் நடிக்கமுடியுமா என்று தெரியவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிப்பதற்குக் காரணம் பற்றியும் கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் க்ரஷ் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). பிரபல தென்னிந்திய நடிகையான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் படங்களில் நடிக்கவில்லை. உடல்நல பிரச்சனையின் காரணமாகப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்தார். மேலும் இவர் இந்தியில் இறுதியாக சிட்டாட்டல் ஹன்னி பன்னி (Citadel Honey Bunny) என்ற வெப் தொடரின் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த வெப் தொடரின் நடிகர் வருண் தவானுடன் (Varun Dhawan) இணைந்து ஆக்ஷ்ன் நாயகியாக நடித்திருந்தார். இந்த வெப் தொடரைத் தொடர்ந்து, சமந்தா பல படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனம் டரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் (Taralala Moving Pictures). இந்த ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் கீழ் முத்தலாக் உருவாகியுள்ள படம் சுபம். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகை சமந்தா தயாரித்துள்ளார்.
மேலும் அவர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.இந்த படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா “படங்களில் மீண்டும் நடிக்கமுடியுமா என்று தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
நடிகை சமந்தா பேசிய விஷயம் :
சமீபத்தில் சுபம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “எனக்கு நடிப்பதைத் தவிர வேறு எதாவது செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதைத் தொடர்ந்து நானும் சிறிதுகாலமாகப் படங்களில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தேன். அப்போதுதான் எனக்குப் படங்களைத் தயாரிக்கலாமா என்று யோசனை வந்தது. நானும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் படங்களில் நடித்து வருகிறேன், இந்த அனுபவத்துடன் படங்களைத் தயாரிக்கலாம் என்று தொடங்கினேன். நானும் சினிமாவில் படங்களில் நடிப்பது குறைந்த நிலையில், இந்த நேரமே படங்களைத் தயாரிக்கச் சரியான நேரம் என்று நான் உணர்ந்தேன்” என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை சமந்தா சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சமந்தாவே தெரிவித்திருந்தார். மேலும் நடிகை சமந்தா அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இந்த படத்திலிருந்து விளக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த படமானது ஹாலிவுட் படத்தின் ரேஞ்சில் உருவாகிவருகிறது. மேலும் நடிகை சமந்தா தற்போது படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.