Cinema Rewind : எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி சொன்ன விஷயம்!

Actress Revathi : தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திவந்தவர் ரேவதி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கமல் ஹாசன் வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் முன்பு பேசிய வீடியோ ஒன்றில் படங்களில் நெகட்டிவ் ரோலில் நடிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதைக் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி சொன்ன விஷயம்!

நடிகை ரேவதி

Published: 

01 May 2025 17:39 PM

தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்து வந்தவர் ரேவதி (Revathi). இவர் தமிழில் மட்டுமில்லாமல் பான் இந்தியக் கதாநாயகியாக அந்த காலத்திலேயே பிரபலமானவர். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் (Bharathiraja)  மண் வாசனை  (Mann Vasanai) என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் சுமார் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக், ரஜினிகாந்த், கமல் ஹாசன்  (Rajinikanth, Kamal Haasan) மற்றும் பல்வேறு பிரபலங்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 80கள் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ரேவதி, தற்போது சில படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் படங்களை இயக்கியும் வருகிறார். இவரின் இயக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் சில படங்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழில் பாரதிராஜாவின் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது இயக்குநராகவும் படங்களை இயக்கி வருகிறார். இவர் இறுதியாகத் திருச்சிற்றம்பலம் என்ற தனுஷ் படத்தில் அவருக்கு அம்மா ரோலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழில் அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்கவேண்டும் என்றும், அதுதான் தனது ஆசை என்றும் கூறியிருந்தார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் நடிகை ரேவதி சொன்ன விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம்.

நடிகை ரேவதி பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகை ரேவதி “என்னை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகை என்றால், படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் பண்ணவேண்டும். கதாநாயகியாக மட்டுமில்லாமல் வேறு வேறு ரோலிலும் நடிக்கவேண்டும். எனக்கும் ஹீரோயினியாக இல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. படங்களில் நெகட்டிவ் ரோலில் நான் நடிக்கவேண்டும். அதற்காக நிச்சயம் சிறந்த வில்லி விருதும் எனக்குக் கிடைக்கும் வேண்டும் என்று நடிகை ரேவதி கூறியிருந்தார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. கதாநாயகியாகப் பார்த்த ரேவதியை, ரசிகர்கள் வில்லியாகவும் பார்க்க ஆர்வம் காட்டிவருகின்றனர்

நடிகை ரேவதியின் இயக்கத்தில் வெளியான படங்கள் :

நடிகை ரேவதியின் இயக்கத்தில் இதுவரை சுமார் 5 படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் 3 படங்களும், ஆங்கிலத்தில் 1 மற்றும் மலையாளத்தில் 1 படங்களையும் இயக்கியுள்ளார். இதில் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் “மித்ர் மை பிரென்ட்” என்ற திரைப்படம். இந்த படமானது கடந்த 2002ம் ஆண்டு வெளியானது. இந்த படம்தான் ரேவதியின் இயக்கத்தில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.