Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Update: ஓடிடியில் அதிக கவனம் பெறும் வடிவேலு – சுந்தர்.சியின் கேங்கர்ஸ் படம்!

Gangers Movie OTT Release : கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் வடிவேலு. இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் நடிகர் சுந்தர் சியுடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. இவர்கள் இருவரின் காமினேஷனில் வெளியான இந்த படமானது ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

OTT Update: ஓடிடியில் அதிக கவனம் பெறும் வடிவேலு – சுந்தர்.சியின் கேங்கர்ஸ் படம்!
வடிவேலு, சுந்தர் சி கேங்கர்ஸ் திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 May 2025 13:58 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர்.சி (Sundar C) . இவரின் முன்னணி நடிப்பிலும் , இயக்கத்திலும் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் வெளியான படம் கேங்கர்ஸ் (Gangers) . இந்த படத்தில் நடிகர் சுந்தர் சி முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு  (Vadivelu) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் சுமார் 15 வருடங்களுக்குப் பின் வெளியாகிய படம் இந்த கேங்கர்ஸ். இந்த படமானது முற்றிலும் காமெடி மற்றும் ஆக்ஷ்ன் படமாக அமைந்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் படமான மணி ஹெயிஸ்ட் படத்தின் கதைக்களத்தைப் பின்பற்றி, தமிழ் மக்களுக்கு ஏற்றார் போல இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடிகை கேத்ரின் தெரேசா (Catherine Teresa) நடித்துள்ளார். இவரும் தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்குப் பின் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சியின் இயக்கத்தில், இந்த படத்தை நடிகை குஷ்பு சுந்தர் தயாரித்திருந்தார்.

திரையரங்குகளில் மக்கள் மனதில் இடம்பெற்ற இந்த படமானது, கடந்த 2025, மே 15ம் தேதி  அமேசன் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த படமானது திரையரங்குகளை விட  ஓடிடியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

கேங்கர்ஸ் படத்தின் கதைக்களம் :

நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சியின் காம்போவில் வெளியான இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வடிவேலு ஒரு அரசுப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுந்தர் சி அந்த பள்ளிக்கு ட்ரெயினிங் உடற்பயிற்சி ஆசிரியராக வருகிறார். அந்த அரசுப் பள்ளியில் நடக்கும் அரசியல் மற்றும் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அவர் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

அந்த பள்ளியின் உரிமையாளர் மற்றும் அவரின் அண்ணன் மற்றும் தம்பிகள் பல கோடி ரூபாயை ஒரு பிரம்மாண்ட லாக்கரில் வைத்துள்ளார்கள். அந்த லாக்கரில் இருந்து பணத்தைத் திருடி வடிவேலு, சுந்தர் சி மற்றும் கேத்ரின் தெரேசா போடும் திட்டங்கள் இந்த படத்தின் பிரதான கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் வடிவேலும் மற்றும் சுந்தர் சியுடன், வாணி போஜன், கேத்ரின் தெரேசா, மினி கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், பகவதி பெருமாள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் , அதைத் தொடர்ந்து 2025, மே 15ம் தேதியில் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படமானது வீக் எண்டில் ஓடிடியில் குடும்பத்துடன் பார்க்க அருமையான படமாக இருக்கும் .

கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!
கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!...
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!...
சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு!
சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு!...
ஓபிஎஸ், இபிஎஸ் தேஜக கூட்டணியில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்!
ஓபிஎஸ், இபிஎஸ் தேஜக கூட்டணியில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்!...
ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் நடிகர் அஜித்தின் ரீசென்ட் போட்டோ!
ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் நடிகர் அஜித்தின் ரீசென்ட் போட்டோ!...
இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி பட ஷூட்டிங்!
இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி பட ஷூட்டிங்!...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம்?
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம்?...
நவகைலாய ஸ்பெஷல்.. சந்திர பகவானுக்குரிய கோயிலின் சிறப்புகள்!
நவகைலாய ஸ்பெஷல்.. சந்திர பகவானுக்குரிய கோயிலின் சிறப்புகள்!...
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டி தீர்த்த சூரி.. நடந்தது என்ன
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டி தீர்த்த சூரி.. நடந்தது என்ன...
ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் - ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் - ராஜ்நாத் சிங்...
சந்தானத்தை ரிஜெக்ட் செய்த வெற்றிமாறன்.. ஏன் தெரியுமா?
சந்தானத்தை ரிஜெக்ட் செய்த வெற்றிமாறன்.. ஏன் தெரியுமா?...