Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharasi : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் மதராஸி.. எங்கு நடக்கிறது தெரியுமா?

Madharasi Movie Shooting Update : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன். இதைத் தொடர்ந்து இவர் மதராஸி படத்தில் நடித்துவந்த நிலையில், இந்த படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Madharasi : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் மதராஸி.. எங்கு நடக்கிறது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் மதராஸி படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 May 2025 16:17 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் ( Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன் (Amaran) . இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் எப்படியோ அதைவிடவும் ஒரு படி மேலாக, நடிகை சாய் பல்லவியின் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரம் அருமையாக இருந்தது. இவரின் நடிப்பிற்காகவே இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் உருவாகிவரும் படம் மதராஸி (Madharasi) .

சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படமானது இது , ஆரம்பத்தில் SKXARM என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 % சதவீதம் நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து இன்னும் இறுதிக்கட்ட ஷூட்டிங் மட்டும் மீதம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் முன்னதாகவே தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதராஸி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் :

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளதாம். தற்போது இந்த படத்தின் இறுதி 5 காட்சிகளை படக்குழு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடந்துவருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துவரும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கும் ஸ்ரீலங்காவில் நடந்துவரும் நிலையில், அதை தொடர்ந்து இந்த படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

மதராஸி படக்குழு வெளியிட அறிவிப்பு :

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்த படமானது, தமிழ் மொழியினை தொடர்ந்து தெலுங்கு , மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகக் கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் நடிகர்கள் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள நிலையில், இது தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...