Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நேரம் வரும்போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும்.. ராஜ்நாத் சிங் அதிரடி!

Rajnath Singh Addressed Navy Force in Gujarat | இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இன்று (மே 16, 2025) குஜராத்தில் விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

நேரம் வரும்போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும்.. ராஜ்நாத் சிங் அதிரடி!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 16 May 2025 15:00 PM

குஜராத், மே 16 : பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக இந்திய அரசு கையில் எடுத்துள்ள ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) இன்னும் முடிவடையவில்லை என்றும் அது இன்னும் தொடர்வதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh) தெரிவித்துள்ளார். குஜராத் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ள இந்திய அரசு

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரையில் கையில் எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பாதிஸ்தானும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில், அது இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு இடையே மே 10, 2025 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அனுமதி தெரிவித்த நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் வீர்ரகள் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா நடத்திய தாக்குதலில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதி அளித்துள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வருகிறது. அங்குள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்று தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் – ராஜ்நாத் சிங்

தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் சிக்கும் அபாயம் உள்ளது. ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் தொடர்கிறது. இதுவரை பார்த்தது ட்ரெய்லர் தான். இனிமேல் தான் படமே இருக்கிறது. நேரம் வரும்போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...
முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?
முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?...
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!...
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?...
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?...