Vikram : விக்ரமின் வீர தீர சூரன் 2 படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்னீக் பீக் வீடியோ!
Veera Dheera Sooran 2 Movie Sneak Peek : நடிகர் விக்ரமின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கியுள்ளார். ஹச்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிலீசான, இப்படத்திலிருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.யு. அருண் குமாரின் (S.U.Arun Kumar) இயக்கத்தில், கடந்த 2025, மார்ச் 27ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இந்த படத்தில் நாயகனாக விக்ரம் (Vikram) நடித்திருந்தார். மேலும் இவர்க்கு ஜோடியாக கோலிவுட் பிரபல நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்திருந்தார். இயக்குநர் எஸ்.யு. அருண் குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை, ஹச்ஆர்.பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் இளம் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருந்தார். இந்த படமானது ஆக்ஷ்ன், காதல் மற்றும் எதார்த்தமான கதைக்களத்தில் அமைந்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியது. இப்படம் வெளியாகி 11 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை சுமார் ரூ. 60 கோடிகளை வசூல் செய்துள்ளது. தற்போது இப்படத்திலிருந்து, நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.