Vijay Antony : விஜய் ஆண்டனியின் 26வது திரைப்படம்.. ஃப்ர்ட்ஸ் லுக் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
Vijay Antony 26th Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவரும் நிலையில், அவரின் 26வது படத்தினை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகும் தேதியை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) சினிமாவில் கிட்டத்தட்டப் பல வருடங்களாக இருந்து வருகிறார். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மற்றும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட்லர் (Hitler). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் தனா இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிகரும் இயக்குநருமான கவுதம் வாசுதேவ் மேனனும் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி மார்கன் (Maargon) , வள்ளி மயில் (Valli Mayil), அக்னி சிறகுகள், காக்கி, மற்றும் சக்தி திருமகன் (sakthi Thirumagan) என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் மார்கன் படத்தின் ஷூட்டிங் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் 27ம் தேதியில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் ஜோசவா சேதுராமன் (joshua sethuraman) இயக்கவுள்ளாராம். இந்த விஜய் ஆண்டனியின் 26வது திரைப்படமான இதன் அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பார்வை வரும் 2025, மே 19ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Justice has a name ⚖️#VA26 First look | 19th | 5PM@Dir_Joshua @vijayantonyfilm pic.twitter.com/U0gasdiYwA
— vijayantony (@vijayantony) May 17, 2025
நடிகர் விஜய் ஆண்டனியின் 26வது திரைப்படத்தை இயக்குநர் ஜோசவா சேதுராமன் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ஜென்டில்வுமன் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனியின் 26வது படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினையும் நடிகர் விஜய் ஆண்டனிதான் தயாரிக்கவுள்ளாராம். இந்த படமானது முழுவதும் சட்டம் தொடர்பாக இருக்கும் என்று போஸ்டர் மூலம் தெரிகிறது.
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் மட்டும் ஏற்கனவே 5 படங்கள் உருவாகிவரும் நிலையில், அதைத் தொடர்ந்து 6வது படமாக இந்த விஜய் ஆண்டனியின் 26வது திரைப்படமும் உருவாக்கவுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வையுடன் இந்த படத்தின் டைட்டிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இடம் பெரும் நடிகர்களை பற்றிய கதகவல்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் கைவசம் மட்டும் சுமார் 6 திரைப்படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.