Maaman vs DD Next Level : வசூலில் சூரியின் மாமன் எப்படி..? சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் முந்தியதா?
Maaman Vs DD Next Level Box Office Collection : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி, தற்போது முன்னை நட்சத்திரங்களாகப் படங்களில் நடித்து வருபவர்கள் சந்தானம் மற்றும் சூரி. இவர்கள் இருவரின் நடிப்பில் ஒரே நாளில் மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள். கடந்த 2025, மே 16ம் தேதியில் வெளியான இந்த படங்கள் இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல்
நடிகர் சூரியின் (Soori) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன் (Maaman). இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியிருந்த நிலையில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர்களின் கூட்டணியில் இந்த மாமன் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நடித்திருந்தார். இவர் தமிழில் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடிகர் சூரியின் மானம் படத்தில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் ராஜ்கிரண், பாப்பா பாஸ்கர், ஸ்வாசிகா மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த படமானது அக்கா, தம்பி உறவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படமானது கடந்த 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது சிட்டி முதல் கிராமங்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
மாமன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#Maaman is winning hearts! Emotional, entertaining, and loved by all. In theatres now – don’t miss it! ♥️@sooriofficial‘s #MaamanInTheatresNow
🎫 Book your tickets now: https://t.co/6Nn3Qq0P06 | https://t.co/tBaJStBYHu
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical pic.twitter.com/rqK0mDcN3D— Lark Studios (@larkstudios1) May 18, 2025
வசூலில் மாமன் படத்தை முந்தியதா டிடி நெக்ஸ்ட் லெவல்?
நடிகர் சூரியின் இந்த மாமன் படத்துடன், நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாகியிருந்தது.இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகியிருந்தாலும், நடிகர் சூரியின் மாமன் படத்திற்குக் கிடைத்த பாசிடிவ் விமர்சனங்கள் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் சூரியின் மாமன் படமானது 2 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 5 கொடிகளை வசூல் செய்துள்ளாராம். இதைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது சுமார் ரூ. 5.5 கோடியை வசூல் செய்துள்ளாராம். கிட்டத்தட்ட இந்த இரு படங்களும் ஒரே வசூலையே பெற்று வருகிறது. மேலும் இந்த படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்து வெற்றிபெறப் போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்ட பதிவு :
Winning hearts and praises 💖
Get your tickets now for #DevilsDoubleNextLevel
🔗 https://t.co/KXTsFcRlU4 @iamsanthanam @arya_offl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo pic.twitter.com/fkLIzBm8TN— TheShowPeopleoffl (@TSPoffl) May 18, 2025
நடித்தார் சந்தானத்தின் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படமானது தில்லுக்கு துட்டு என்ற படத்தின் தொடர்ச்சி பாகங்களாக அடுத்தடுத்து உருவாக்கி வருகிறது. நடிகர் சந்தானத்தின் இந்த படமானது ரிலீசிற்கும் முன்னே பல விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் சந்தனத்துடன் நடிகர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், கீத்திகா திவாரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார். இந்த படமானது அதிரடி நகைச்சுவை மற்றும் திகில் கலந்த கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. தற்போது திரையரங்குகளில் சூரியின் மாமன் படத்திற்கும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கும்தான் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.