Santhanam : ‘நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்’… நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவு வைரல்!
Santhanam Twitter post : நகைச்சுவை நடிகராக சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அந்த ட்ரெய்லரை பகிர்ந்த கார்த்தி, சிம்பு மற்றும் விஷாலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வருபவர் சந்தானம் (Santhanam) . ஆரம்பத்தில் சினிமாவில் காமெடியனாக (comedian) நுழைந்த இவர், தற்போது முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வரும் 2025, மே 16ம் தேதியில் வெளியாகவுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று, 2025, ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகியுள்ளது. முற்றிலும் கலகலப்பான காமெடி கலந்த, திகில் படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் கார்த்தி, சிலம்பரசன் மற்றும் விஷால் (Karthi, Silambarasan and Vishal) இணைந்து தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டதற்கு நடிகர் சந்தானம் நன்றி தெரிவிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் சந்தானம் “நண்பன் உடையான் படைக்கு அஞ்சான், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டதற்கு நன்றி டார்லிங்ஸ்” என்று அவர் அதில் எழுதியுள்ளார். இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் சந்தானம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Nanban udaiyaan padaikku anjaan!
Thanks to my Darlings for launching the trailer of #DevilsDoubleNextLevel!@SilambarasanTR_ @Karthi_Offl @VishalKOfficial pic.twitter.com/Z7ZtWVT5EY— Santhanam (@iamsanthanam) April 30, 2025
நடிகர் சந்தானத்தின் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைப் பிரபல இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படமானது தில்லுக்கு துட்டு என்ற படத்தொகுப்பில் 4வது பாகமாக உருவாகியுள்ளது. இதுவரை வெளியான 3 பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 4வது பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது உருவாகியுள்ளது. எல்லா படத்தையும் போல் இந்த படத்திலும் நடிகர் சந்தானம் முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லீ, கஸ்தூரி சங்கர், யாஷிகா ஆனந்த் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் தரமான ரோலில் நடித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தின் சூப்பர் ஹிட் பாடலான உயிரின் உயிரே என்ற பாடல் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூர்யாவாகக் கவுதம் வாசுதேவ் மேனனும், ஜோதிகாவாக யாஷிகா ஆனந்தும் அந்த பாடலை ரீ கிரியேரெட் செய்துள்ளனர். தற்போது இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.