Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life : ‘தக் லைஃப்’ படக் கொண்டாட்டம்.. டிரெய்லர் முதல் இசை வெளியீட்டு விழா வரை – படக்குழு அறிவிப்பு

Thug Life Movie Trailer And Audio Launch Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் முதல் இசை வெளியீட்டு விழா வரையிலான அறிவிப்புகளைப் படக்குழு ஒன்றாக வெளியிட்டுள்ளது.

Thug Life : ‘தக் லைஃப்’ படக் கொண்டாட்டம்.. டிரெய்லர் முதல் இசை வெளியீட்டு விழா வரை – படக்குழு அறிவிப்பு
தக் லைஃப்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 14 May 2025 20:17 PM

இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam)  இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்திற்குப் பின், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல் ஹாசனும் (Kamal Haasan) இணைந்து எழுதியுள்ளார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்துடன், பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இரண்டு முக்கியமான ஹீரோக்களாக இருப்பவர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் (Silambarasan). இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்த படமானது ஆக்ஷ்ன் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1 வருடத்திற்கும் மேலாக இந்த படமானது சிறப்பாகத் தயாராகி வந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த 2025, மார்ச் மாதம் முதல் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி மற்றும் இசை வெளியீட்டு விழாவின் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, மே 16ம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2025, மே 24ம் தேதியில், சென்னை சாய்ராம் கல்லூரியில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஒரே அறிவிப்பில் இரண்டும் அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நடிகர் சிலம்பரசனும் அவருக்கு இணையான ரோலில் நடித்துள்ளார். இதில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி சுமார் 15 வருடங்களுக்குப் பின் இந்த படத்தில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் அசோக் செல்வன், சான்யா மல்ஹோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படிப் பட்ட பிரம்மாண்ட படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தின் முதல் சிங்கிள் “ஜிங்குச்சா ஜிங்குச்சா” என்ற பாடலானது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்த படக்குழு ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் தேதியை ஒரே அறிவிப்பில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?...
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்...
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு...
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி...
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா...
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?...
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங்?
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின்
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?...
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...