எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. பாஜகவினருக்கு அழைப்பு..
Edappadi Palanisamy: 2025 ஜூலை 7 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அதிமுக தரப்பில், பாஜகவினர் கலந்துக்கொள்ளும் படி ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் அந்த வகையில் வருகின்ற 2025 ஜூலை 7ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழக முழுவதும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவினரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பெயரில் 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்க இருக்கும் பிரச்சார பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் – எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்:
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களை இருக்கக்கூடிய நிலையில் அதிமுக கட்சி தரப்பில் தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக 2025 ஜூலை 7ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார். முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கப்படுகிறது.
பயண அட்டவணை:
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்– முதல் கட்டம் (திருத்தம்)
-தலைமைக் கழக அறிவிப்பு.#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#EPSfor2026 pic.twitter.com/PWwRoqcUiO
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 2, 2025
- ஜூலை 7, 2025 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம்
- ஜூலை 8, 2025 அன்று கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை சந்திக்கிறார்.
- ஜூலை 10 2025 அன்று விழுப்புரம், விக்கிரபாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட தொகுதிகளை சந்திக்கிறார்.
- ஜூலை 11, 2025 அன்று வானூர், மயிலம், செஞ்சி.
- ஜூலை 12 2025 அன்று கடலூர், பண்ருட்டி, நெய்வேலி.
- ஜூலை 14 2025 குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி
- ஜூலை 15 2025 அன்று குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்
- ஜூலை 16 2005 அன்று சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்
- ஜூலை 17 2025 அன்று சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை
- ஜூலை 18 2025 அன்று நன்னிலம், திருவாரூர்
- ஜூலை 19 2025 அன்று நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி
- ஜூலை 21 2025 அன்று மன்னார்குடி திருவிடைமருதூர், கும்பகோணம்.
பாஜகவினருக்கு அழைப்பு:
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் கூட்டணியில் இருக்கக்கூடிய பாஜக கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே அதிமுகவினர் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியான பாஜகவினரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.