மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்! | TV9 Tamil News

மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!

Updated On: 

21 Mar 2026 14:17 PM

 IST

Best Post Office Scheme For Retirement | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,000 வருமானம் வழங்கக்கூடிய அசத்தல் திட்டம் ஒன்று உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் குறிப்பாக, ஓய்வு காலத்திற்கு பிறகு சொல்லவே வேண்டாம். காரணம், ஓய்வு காலத்தில் மாத ஊதியம் இல்லாததால் முதியவர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்க்கொள்வர். மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.

மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் குறிப்பாக, ஓய்வு காலத்திற்கு பிறகு சொல்லவே வேண்டாம். காரணம், ஓய்வு காலத்தில் மாத ஊதியம் இல்லாததால் முதியவர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்க்கொள்வர். மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.

2 / 5

அந்த கவலைகளை போக்கும் வகையில் தான் அரசு ஒரு அசத்தலான திட்டத்தை செயல்பாட்டில் வைத்துள்ளது. அந்த திட்டத்தின் பெயர் தான் மூத்த குடிமக்கள் செமிப்பு திட்டம். அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.20,000 வருமானமாக பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ஒருவர் நல்ல தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நபருக்கு ஆண்டு வட்டி மற்றும் அசல் தொகை என இரண்டுமே கிடைக்கும். 

4 / 5

உதாரணமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் ஒருவர், அதிகபட்ச தொகையான ரூ.30 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், அவருக்கு ஆண்டுக்கு வட்டியாக மட்டுமே ரூ.2.46 லட்சம் கிடைக்கும். இதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.61,500 ஆக பெற்றுக்கொள்ளலாம். 

5 / 5

இந்த தொகை மாத வாரியாக பிரிக்கும் பட்சத்தில் மாதம் ரூ.20,500 கிடைக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.20,500 பெற முடியும். இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி மிச்சம் செய்யப்படும் வாய்ப்பும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us