Income Tax : வருமான வரி ரீஃப்ண்ட் இன்னும் வரவில்லையா?.. இதை செய்யவில்லை என்றால் சிக்கல் தான்!
Income Tax Refund Hold | வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு, வருமான வரி ரீஃபணட் வழங்கப்படும். இந்த நிலையில், 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த பலருக்கு ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் இந்த வருமான வரியை செலுத்த வேண்டும். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக்கு ரீஃபண்டும் (Income Tax Refund) வழங்கப்படும். வருமான வரியை தாக்கல் செய்யும்போது ஏதேனும் தவறு அல்லது முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில், உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காத நிலையில், நீங்கள் மீண்டும் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் என்ன அர்த்தம்
2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை பலரும் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்களது வருமான வரி ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி வருமான வரி தாக்கல் செய்தவர்களை, தங்களது ரீஃபண்ட் குறித்து கவனத்தில் கொள்ள வலியுறுத்தும் விதமாக வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க : Year Ender 2025: அமேசான் முதல் ஃபிளிப்கார்ட் வரை… இ-காமர்ஸ் துறையில் அசூர வளர்ச்சி – காரணம் என்ன?
ரீஃபண்டை தானாக பெற முடியாது
வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களது ரீஃப்ணட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தால் அவர்களால் தங்களது ரீஃபண்ட் பணத்தை தானாக பெற முடியாது. ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து வருமான வரி தாக்கல் செய்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். காணரம் ஏதேனும் சிக்கல் உள்ளது என்பதை உணர்ந்தால் மட்டுமே வருமான வரித்துறை ரீஃபண்டை நிறுத்தி வைக்கும். இந்த நிலையில், அது குறித்து நடவடிக்கையே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதற்கு தானாக தீர்வு கிடைக்காது.
இதையும் படிங்க : January 2026 : கிரெடிட் ஸ்டோர் முதல் ஆதார் – பான் இணைப்பு வரை.. ஜனவரி மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
ரீஃபண்ட் நிறுத்தி வைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து வருமான வரி தாக்கல் செய்தவர்கள் உரிய நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சில சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும். உதாரணமாக குறைந்த வருமான வரி ரீஃபண்ட், ஏற்கனவே செலுத்த வேண்டிய வரிகளுக்கு பிடித்தம் செய்யப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.