கணவன் – மனைவிக்கான 5 சிறந்த கிரெடிட் கார்டுகள் – இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Add-on Cards : இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து குடும்ப செலவுகளைக் கடுப்படுத்த விரும்புகின்றனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் பல வங்கிகள் ஆட் ஆன் கிரெடிட் கார்டுகள் (Add on Credit Cards) வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தம்பதிகளுக்கு ஏற்ற 5 சிறந்த கிரெடிட் கார்டுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

கணவன் - மனைவிக்கான 5 சிறந்த கிரெடிட் கார்டுகள் - இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Jun 2025 18:25 PM

இன்றைய பொருளாதார சூழ்நிலையில்  கணவன் – மனைவி இருவரும் வாழ்க்கையில் எப்படி ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்களோ அதே போல  நிதி பரிமாற்றங்களிலும் நேர்மையான பங்கெடுப்பை விரும்புகின்றனர். ஒரே கிரெடிட் கார்டு  (Credit Card) கணக்கில் இருவரும் பயன்படுத்தும் வசதியுடன், வங்கிகள் வழங்கும் ஆட் ஆன் கார்டுகள்’ (Add-on Cards) தம்பதிகளிடையே பிரபலமடைந்து வருகின்றன. இந்த வகை கிரெடிட் கார்டுகள் மூலம் தம்பதிகள் ஒரே கணக்கில் சேர்க்கும் ரிவார்டு பாயிண்ட்களைப் (Rewards) பகிர முடிகிறது. மேலும் இருவரும் சேர்ந்து செய்யும் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.  சில வங்கிகள் இந்த கிரெடிட்ட கார்டுகளுக்கு ஆண்டு கட்டணங்களை வசூலிப்பது இல்லை என்பது கூடுதல் சிறப்பு மேலும் உணவகங்களில் கேஷ்பேக், மற்றும் சினிமா டிக்கெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மின்ட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் கணவன் – மனைவிகளுக்கான சிறந்த

எச்டிஎஃப்சி ரெகலியா கோல்டு கிரெடிட் கார்டு (HDFC Regalia Gold Credit Card)

ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வெளிநாட்டு பயணங்களை விரும்பும் தம்பதிகளுக்குப் பொருத்தமான தேர்வாகும். இதில் Myntra, Nykaa போன்ற பிரபல இணையதளங்களில் நாம் செய்யும் ஷாப்பிங்குகளுக்கு பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும், உலகம் முழுவதிலும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் லாஞ்ச் அனுமதியும் நமக்கு கிடைக்கும்.

ஆக்சிஸ் பேங்க் செக்ட் கிரெடிட் கார்டு (Axis Bank SELECT Credit Card)

வாரந்தோறும் திரைப்படங்களுக்கு செல்லும் தம்பதிகளுக்கு ஏற்றது. இதன் மூலம் இதில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் போன்ற ஆஃப்ரகளும் கிடைக்கின்றன. மேலும் ஆண்டு இறுதியில் நம் பயன்படுத்தும் திறனுக்கு ஏற்ப கிஃப் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

எஸ்பிஐ பிரைம் கிரெடிட் கார்டு (SBI Prime Credit Card)

தினசரி செலவுகள் மற்றும் மாதாந்திர மளிகை கடை செலவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு ஏற்றது.  இதில் உபயோகிக்கப்படும் தொகைக்கு ஏற்ப பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன.  இதில் ரூ.3000 வெல்கம் வவுச்சர், 8 மறை விமான நிலைய லாஞ்ச் அனுமதி,   போன்ற சலுகைகள் கிடைக்கும்.

ஐசிசிஐ பேங்க் சாப்பிரோ கிரெடிட் கார்டு (ICICI Bank Sapphiro Credit Card)

பிரீமியம் வாழ்க்கை முறையையும் பயண அனுபவத்தையும் விரும்பும் தம்பதிகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாதத்திற்கு 4 முறைகள் வரை கால்ஃப் கோர்ஸ் (Golf Course) அனுபவம் இலவசமாக வழங்கப்படுவதுடன், 8 முறை விமான நிலைய லவஞ்ச் அனுமதியும் கிடைக்கும்.

டாடா நியு இன்ஃபினிட்டி எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு (Tata Neu Infinity HDFC Bank Credit Card)

டாடா பிராண்டுகளை அதிகம் பயன்படுத்தும் மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை முறையை விரும்பும் தம்பதிகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. Tata Neu பயன்பாட்டின் வாயிலாக நியூ காயின்ஸ் சேமித்து பயன்படுத்தும் வசதி உள்ளது. Tata 1mg, Croma, BigBasket போன்ற ஷாப்பிங் தளங்களில்  5 சதவிகிதம் வரை சலுகைகள் பெறலாம்.

இவ்வாறு, தம்பதிகளுக்கான கிரெடிட் கார்டுகள் இன்று வாழ்க்கையின் நிதி பரிமாற்றங்களை எளிதாக்குவதோடு மட்டும் இல்லாமல், இணைந்து அனுபவிக்க வேண்டிய பல்வேறு வாழ்வியல் அனுபவங்களுக்கும் அடித்தளமாக செயல்படுகின்றன. இருப்பினும், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் பொழுது செலவுகளை கவனமாக திட்டமிட்டு, தவறான கடன் பழக்கங்களில் சிக்காமல் நிதி ஒழுங்கை பின்பற்றுவது முக்கியம்.