Fixed Deposit : FD திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்.. பட்டிய இதோ!

Small Finance Banks Offers More than 9 Percentage Interest | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் எஃப்டி திட்டங்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Fixed Deposit : FD திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்.. பட்டிய இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 May 2025 01:11 AM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) மிக முக்கிய ஒன்றாக உள்ளது. பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். எனவே தான் பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சேமிப்பு மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமாக உள்ள நிலையில், சேமிக்க சிறந்த திட்டமாக உள்ளதுதான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம்.

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒரு தொகை முதலீடு செய்தால், எத்தனை ஆண்டுகளுக்கான திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களோ அத்தனை ஆண்டுகள் அதற்கு வட்டி வழங்கப்படும். இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் பல கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுகு அதிக வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டம் – அதிக வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) அதிகபட்சமாக தனது 888 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.05 சதவீதம் வட்டி வழங்குகிறது.

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank) அதிகபட்சமாக தனது 18 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.

சூர்யோதய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) அதிகபட்சமாக தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) அதிகபட்சமாக தனது 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) அதிகபட்சமாக தனது 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.