Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டியை உயர்த்திய வங்கிகள்.. பட்டியல் இதோ!
Banks Offers High Interest Rates for Senior Citizen FD | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு ஏற்கனவே சிறந்த வட்டி வழங்கப்படும் நிலையில், வட்டி உயர்த்தப்பட்ட சில நிலையான வைப்பு நிதி திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொருளாதார சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்கி வைப்பது, சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய முடியும். சேமிப்பு திட்டங்கள் என்றால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அந்த திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்கின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பலன்களை வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டம்
அதிக வட்டி, பாதுகாப்பான முதலீடு, நிதி இழக்கும் அபாயம் குறைவு பல அம்சங்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் உள்ளது. இதற்காகவே பலரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் அதிக வட்டியுடன் கூடிய பல நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தற்போது சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளன. பொதுவாகவே மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த வட்டி உயர்வு மூத்த குடிமக்கள் நல்ல லாபத்தை பெற வழிவகை செய்யும் விதமாக அமைந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டம் – வட்டியை உயர்த்திய வங்கிகள்
இன்டஸ்இண்ட் வங்கி
இன்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி அதிகபட்சமாக 15 முதல் 16 மாதங்கள் கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி (Bandhan Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 3 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
எஸ் பேங்க்
எஸ் பேங்க் (Yes Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 3.75 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி (RBL Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், 500 நாட்களுக்கான திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.