Google Pay வழங்கும் பெர்சனல் லோன் – பெறுவது எப்படி? என்ன விதிமுறைகள்?

Google Pay Personal Loan: யுபிஐ செயலிகளில் ஒன்றான கூகுள் பே தற்போது பெர்சனல் லோன் வழங்குகிறது. இதற்காக ஆதித்யா பிர்லா கேப்பிடல்ஸ், ஆக்சிஸ் பேங்க், டிஎம்ஐ ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை அந்நிறுவனம் வழங்குகிறது.கூகுள் பே மூலம் எப்படி பெர்சனல் லோன் பெறுவது அதன் விதிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Google Pay வழங்கும் பெர்சனல் லோன் - பெறுவது எப்படி? என்ன விதிமுறைகள்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Apr 2025 15:29 PM

உலக அளவில் மக்கள் அதிகமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதற்கு கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ (UPI) ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். நமது வங்கி கணக்குகள் யுபிஐ மூலம் இணைக்கப்பட்டு பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் மின்சாரக் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், போன்ற அனைத்து சேவைகளுக்கும் இதன் மூலம் பணம் செலுத்தலாம் என்பதால் பல வேலைகளை எளிதில் செய்ய முடிகிறது. மேலும் மளிகை கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் நாம் வாங்கும் பொருட்களுக்கு இதன் மூலம் பணம் செலுத்த முடியும். இதனால் வெளியே செல்லும்போது முன்பு போல பணம் எடுத்து செல்ல வேண்டியதில்லை. மேலும் பணம் செலுத்த நாம் ஒவ்வொரு முறையும் இதனை பயன்படுத்தும்போது நமக்கு தேவையான ரிவார்ட்ஸ் மற்றும் ஆஃபர்ஸையும் இதன் மூலம் பெறலாம். மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளை பயன்படுத்தும் போது கேஷ்பேக்கும் கிடைக்கிறது.

கூகுள் பே தற்போது இந்தியாவில் பல நம்பிக்கைக்குரிய பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெர்சனல் லோன் வழங்குகிறது. இது முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. அதாவது உங்கள் கடன் ஒப்புதல் மற்றும் பணம் டிரான்ஸ்ஃபர் அனைத்தும் ஆன்லைனிலேயே நடக்கும். கூகுள் பே இந்த கடன்களை ஆக்சிஸ் பேங்க், ஆதித்யா பிர்லா கேபிட்டல், டிஎம்ஐ ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.  மருத்துவம், கல்வி, போன்ற அவசர தேவைகளுக்கு இந்த திட்டம் பெரிதும் கைகொடுக்கும். மேலும் அலைச்சல் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்

  • இதில் கடன் தொகை ரூ. 30, 000 முதல் ரூ. 12,00,000 வரை வழங்கப்படுகிறது.
  • மாதத் தவணை ரூ. 2000 முதல் கிடைக்கிறது.
  • மேலும் இதற்கு கடன் தொகைக்கு ஏற்ப 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
  • இதற்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.1 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி செயல்படுகிறது?

  • கூகுள் பே ஆப்பிற்கு சென்று Loan அல்லது Personal Loan என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்

  • உங்கள் பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் பிற விவரங்களை பதிவேற்றவும்

  •  ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரை  நீங்கள் விரும்பும் கடன் தொகையை தேர்வு செய்யவும்.

  • கிடைக்கும் EMI திட்டம், வட்டி விகிதம், கால அளவை தெரிந்துகொள்ளவும்.

  • அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டதும், கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கூகுள் பே மூலம் பெர்சனல் லோன் பெறுவது தற்போது மிகவும் எளிமையான மற்றும் பாதுகாப்பான வழியாக மாறியுள்ளது. பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் நம்பிக்கையுடன், விரைவான அனுமதி, குறைந்த வட்டி விகிதம் மற்றும் சுலபமான மாதத் தவணை ஆகியவை இதனை எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக்குகிறது. எந்தவொரு கடனையும் எடுத்துக்கொள்ளும் முன்,  திரும்ப செலுத்தும் திறன், வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளை நன்றாக ஆய்வு செய்து பிறகு தீர்மானிக்க வேண்டும். நிதி கட்டுப்பாட்டுடன் கடனை பயன்படுத்தினால், இது உங்கள் வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற ஒரு நல்ல கருவியாக இருக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)