வைப்பு நிதி முதல் சுகன்யா சம்ரிதி திட்டம் வரை… – சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்? – வெளியான தகவல்

மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்களான வருங்கால வைப்பு நிதி , நேஷனல், Sukanya Samriddhi Yojana போன்றவற்றிற்கான புதிய வட்டி விகிதங்களை ஏப்ரல்–ஜூன் 2026 காலாண்டுக்காக மார்ச் 31 அன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முக்கிய முடிவாக இருக்கும்.

வைப்பு நிதி முதல் சுகன்யா சம்ரிதி திட்டம் வரை... - சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்? - வெளியான தகவல்

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Mar 2026 19:20 PM

 IST

மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்களான வருங்கால வைப்பு நிதி , நேஷனல் சேவிங் ஸ்கீம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்றவற்றிற்கான புதிய வட்டி விகிதங்களை ஏப்ரல்–ஜூன் 2026 காலாண்டுக்காக மார்ச் 31 அன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முக்கிய முடிவாக இருக்கும். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க அல்லது முதலீடு செய்ய மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வாய்ப்பு வழங்குகின்றன. மேலும் இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி மற்றும் வரி விலக்கு போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன. இந்த நிலையில் இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கு அரசு வட்டி விதிகங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தற்போதைய வட்டி விகிதங்கள் என்ன?

பொருளாதார விவகாரத் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜனவரி முதல் மார்ச் 2026 முதல் காலாண்டில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடர்ந்தன. தற்போது முக்கிய திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். அதன் படி சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு 8.2 சதவிகிதமும், வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு 7.1 சதவிகிதமும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு 7.7 சதவிகிதமும், கிஷன் விகாஷ் பத்ரா திட்டத்துக்கு 7.5 சதவிகிதமும் மாத வருமான திட்டத்துக்கு 7.5 சதவிகிதமும், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு 7.1 சதவகிதமும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு திட்டத்துக்கு 4 சதவிகிதமும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.2 லட்சத்துக்கு ரூ.89,990 வரை லாபம் – விவரம் இதோ

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அரசால் பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. இந்த முடிவுகள், அரசு பத்திரங்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. இது ஷியமளா கோபிநாத் குழுவின் பரிந்துரையின் படி, சந்தை வட்டி நிலைமைகளைப் பொருத்தே இந்த விகிதங்கள் மாற்றப்பட வேண்டும்.

இதையும் படிக்க : உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

சமீப காலமாக அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு, உலக பொருளாதார மந்த நிலை, பணப்புழக்கம் இவை அனைத்தும் வட்டி விகித முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் வட்டி உயருமா, அல்லது கடந்த காலாண்டில் அறிவிக்கப்பட்ட வட்டியே தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அரசின் நிதி சுமை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை வட்டி விகிதம் தொடர்பான முடிவில் முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்த சேமிப்பு திட்டங்களை நம்பியுள்ள மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்