Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIP : சிப் திட்டத்தில் ஏற்படும் நஷ்டத்துக்கு காரணம் என்ன? எப்படி முதலீடு செய்வது?

SIP Investment Warning : இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றான SIP முறையில் முதலீடு செய்யும் பலரும் மூன்று ஆண்டுகள் கூட தொடர முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் சரியான கால அளவு மற்றும் பங்கு சந்தையின் அப்போதைய நிலை ஆகியவை நம் முதலீடுகளில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

SIP : சிப் திட்டத்தில் ஏற்படும் நஷ்டத்துக்கு காரணம் என்ன? எப்படி முதலீடு செய்வது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 May 2025 15:09 PM

முதலீடுகளில் (Investment) மக்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கான எளிய வழியாக சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்‌மெண்ட் பிளான் ( SIP) பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் சிப் திட்டத்தின் மூலமாக முதலீடு செய்யும் மக்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்கிறார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக நீண்ட கால முதலீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிக்கலானதாக மாறி வருகிறது. காரணம் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் பொருளாதார சிக்கல் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த நிலையில் பொருளாதார நிபுணர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவை எழுதியுள்ளார். அதில்  நீண்டகால முதலீடுகள் பொருளாதரா ரீதியாக தன்னிறைவு பெற்றவர்களுக்கு மட்டுமே ஏற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் பின்வாங்குவதற்கான காரணம்

மேலும் குழந்தைகளின் பள்ளி கட்டணம், திடீர் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாதவர்களால் நீண்ட முதலீட்டை தொடர முடியாமல் பின்வாங்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் எப்பொழுதும் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள முடியாது என்கிறார். மேலும் முதலீடு செய்யும் கால அளவை விட மார்க்கெட்டின் அப்போதைய நிலை, மார்க்கெட்டி மதிப்பு ஆகியவை மிக முக்கியம். இந்த நிலையில் அவர் மூன்று காலகட்டங்களை வைத்து இதனை விளக்குகிறார்.

  • கடந்த 2000-2010 காலகட்டத்தில் இந்திய பங்குச் சந்தை 5.5 மடங்கு உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அபாரமான லாபங்களை கண்டனர்.
  • 2011-2019 காலகட்டத்தில் பங்கு சந்தை மிக மெதுவாகவே உயர்ந்தது. இந்த காலத்தில் முதலீடு செய்தவர்களுக்கு Compound Annual Growth Rate ஆண்டு வருமான உயர்வு சதவிகிதம் சராசரியாக 9 முதல் 10 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது.
  • அதே போல 2020-2025 காலகட்டத்தில் கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் சந்தை மதிப்பு 3 மடங்கு உயர்ந்தது. இந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல வருமானம் பெற்றனர்.

பொருளாதார நிபுணர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவாவின் எக்ஸ் பதிவு

 

அதாவது வெவ்வேறு காலகட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்த லாபத்தின் மதிப்பில் வேறுபாடுகள் இருந்தது.

எனவே 5, 10 அல்லது 20 ஆண்டுகளில் சிப் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றால் அதனை நம்பாதீர்கள், மார்கெட் மதிப்பிடுகளை கவனியுங்கள் என்கிறார். சிப் என்பது கட்டுப்பாடுள்ள முதலீடு தான் என்றாலும் அதில் வெற்றிபெற சரியான காலகட்டம், சந்தை மதிப்புகளை புரிந்துகொள்ளும் திறன், நமது பொருளாதாரம் ஆகியவற்றை சார்ந்து நமது வெற்றி தோல்வி இருக்கும் என்கிறார்.

அதே போல நீங்கள் ஒரு ஆண்டுக்கு ரூ. 60,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு லாபமாக ரூ.4,773 கிடைக்கும். அதாவது 7 சதவிகிதம் கிடைக்கும். அதே போல 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 20 சதவிகிதம் லாபமும், 10 ஆண்டுகளில் 54 சதவிகித லாபமும் கிடைக்கும். எவ்வளவு காலம் நாம் முதலீடு செய்கிறோமோ அதனை பொறுத்தே நமக்கு கிடைக்கும் லாபமும் உயரும்.

சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!...
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?...
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்
பல் பிரச்சனைகளுக்கு தீர்வுதரும் பதஞ்சலியின் டான்ட் காந்தி பேஸ்ட்...
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!
கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்புகள்!...
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?
அதிக வியர்வையும் ஆபத்து.. தேடி வரும் சம்மர் பிரச்னைகள் என்ன?...
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை
குப்பை கழிவுகளால் யானை உயிரிழப்பு! பகுதி முழுவதும் குப்பை போட தடை...
சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? - நடிகர் சூரி பதில்
சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? - நடிகர் சூரி பதில்...
துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்!
துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்!...
நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கா? காரணம் இதுவாக இருக்கலாம்!
நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கா? காரணம் இதுவாக இருக்கலாம்!...