துபாயில் இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அனில் குமார் சமீபத்தில் லாட்டரி மூலம் ரூ.240 கோடி வென்றார். இது இந்தியாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அனில் குமார் கடந்த 6 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லக்கி டே டிராை என்ற லாட்டரியில் (Lottery) 100 மில்லியன் திராம்கள் இந்திய மதிப்பில் ரூ. 240 கோடி வென்றுள்ளார். பலரும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது வெற்றி குறித்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் இந்தியாவில் வரி (Tax) செலுத்த வேண்டுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
லாட்டரியில் வென்ற பணத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்துக்கு எந்தவிதமான வரியும் செலுத்த தேவை இல்லை. அதாவது, அனில் குமாருக்கு வெற்றி தொகை முழுமையாக அபுதாபியில் உள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்தியாவில், லாட்டரி, கேம் ஷோ, குவிஸ் போட்டிகள் போன்றவற்றில் கிடைக்கும் பரிசுத் தொகைக்கு நேரடியாக 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். மேலும், ரூ.1 கோடிக்கு மேற்பட்ட பரிசுத் தொகைக்கு 15 சதவிகிதம் சார்ஜ் மற்றும் மொத்த வரிக்கு மேல் 4 சதவிகித சுகாதார மற்றும் கல்வி வரி சேர்க்கப்படும். ஆனால் அது இந்தியாவில் குடியுரிமை பெற்றவர்களுக்கே பொருந்தும்.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கணக்கு வரை.. நவம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
ஒருவர் இந்தியாவில் வசிப்பவர்களாக கருவதற்கு இந்திய வருமான வரித்துறை சில விதிகளை வித்துள்ளது. அதன்படி ஒருவர் ஓராண்டில் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்து வந்தால், அல்லது கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 365 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் அவர் இந்தியாவில் வசிப்பவராக கருதப்படுவார். அதனால் அவர் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் அனில் குமாரைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து 1.5 ஆண்டுகள் வெளிநாட்டில் வசிப்பதால் அவர் இந்தியாவில் குடியிருப்பவராக கருதப்பட மாட்டார். எனவே அவர் லாட்டரி மூலம் வென்ற பணத்துக்கு வரி செலுத்த தேவையில்லை.
இதையும் படிக்க : நவம்பர் மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
லாட்டரி தொகையை இந்தியாவுக்கு கொண்டு வர முடியுமா?
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு நாணயச் சட்டத்தின் படி, வெளிநாட்டில் வென்ற லாட்டரி தொகையை இந்தியாவுக்கு அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த தொகை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கி கணக்கில் தான் இருக்க வேண்டும். அவற்றை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரிக்கு வரி இல்லை. வெளி நாட்டை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு இந்திய வரி பொருந்தாது. மேலும் அனில் குமாரால் இந்தியாவுக்கு பணத்தை கொண்டு வர முடியாது. ஆனால் அபுதாபியில் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
