Fuel Price Hike: கலால் வரியை அதிரடியாக அதிகரித்த மத்திய அரசு.. விரைவில் உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை..!
India Petrol and Diesel Price Hike: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் மீதான கலால் வரி இப்போது லிட்டருக்கு ரூ.11 லிருந்து ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டீசல் மீதான இந்த விகிதம் லிட்டருக்கு ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி, ஏப்ரல் 7: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான (Petrol Diesel Price Hike) கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்த்து மத்திய அரசு (Central Government) இன்று அதாவது 2025 ஏப்ரல் 7ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் எண்ணெய் விலைகளில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தில் வரி மாற்றம் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் புதிய விலைகள் நாளை அதாவது 2025 ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இந்த செலவை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
எவ்வளவு அதிகரிப்பு..?
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் மீதான கலால் வரி இப்போது லிட்டருக்கு ரூ.11 லிருந்து ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டீசல் மீதான இந்த விகிதம் லிட்டருக்கு ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு எரிபொருட்களிலும் லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. மத்திய கலால் வரிச் சட்டம், 1944 இன் பிரிவு 5A மற்றும் நிதிச் சட்டம், 2002 இன் பிரிவு 147 இன் கீழ் இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. பொது நலனுக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்றும், இது நாட்டின் வருவாய் நிலையை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
Central Government raises excise duty by Rs 2 each on petrol and diesel: Department of Revenue notification pic.twitter.com/WjOiv1E9ch
— ANI (@ANI) April 7, 2025
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்த அதிகரிப்பின் சுமையை சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. ஆனால், சில்லறை விலைகளில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக கூறவில்லை என்றாலும், தொழில்துறை வட்டாரங்களின்படி, சில்லறை விலைகள் மாற வாய்ப்பிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக அதிகரித்த கலால் வரி ஈடுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் எப்போது அமல்படுத்தப்படும்?
மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த புதிய உத்தரவு 2025 ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது, இந்த தேதிக்குப் பிறகு பெட்ரோல் அல்லது டீசல் வாங்குபவர்கள் அதிகரித்த கலால் வரியின்படி விலையை செலுத்த வேண்டும்.