Home Loan : வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ்களை பினபற்றுங்கள்!

Home Loan Repayment Tips | பெரும்பாலான மக்கள் சொந்த வீடு வாங்குவதற்காக அல்லது வீடு கட்டுவதற்காக வங்கிகளில் வீட்டு கடன் வாங்குகின்றனர். இந்த கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படும் நிலையில், அதிக வட்டி செலுத்தாமல் குறுகிய காலத்தில் வீட்டு கடனை அடைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Home Loan : வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ்களை பினபற்றுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

22 May 2025 18:37 PM

சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது பெரும்பாலான நபர்களின் கனவாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு சொந்த வீடு என்பது மிக எளிதான ஒன்றாக உள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அது மிகப்பெரிய கனவாக உள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் கடனை திருப்பி செலுத்தும் போது அதிக தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், கடன் காலத்திற்கு முன்னதாகவே கடனை அடைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டு கடனால் அதிக சிக்கல்களை எதிர்க்கொள்ளும் பொதுமக்கள்

சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக பெரும்பாலானோர் வங்கியில் கடன் பெறுகின்றனர். இவ்வாறு வங்கியில் வீட்டு கடன் வாங்கும் பட்சத்தில் அதனை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஆகலாம். இந்த 30 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் வங்கி கடனுக்கான மாத தவணையை செலுத்த வேண்டும். வங்கி கடனை பொறுத்தவரை கடனை திருப்பி செலுத்தும் காலம் எத்தனை ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு வட்டியும் கூடிக்கொண்டே போகும். இந்த நிலையில், அதிக தொகையை திருப்பி செலுத்தாமல் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே வீட்டு கடனை திருப்பி செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திட்டங்களில் முதலீடு செய்வது

வீட்டு கடன் பெறும் நபர்கள் தாங்கள் வாங்கிய கடனை விட அதிக வட்டி தரும் முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நிதி இழப்பை தடுக்க முடியும். மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவை இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.

முன்பணத்தை அதிகரிக்க வேண்டும்

வங்கிகளில் பெரும் கடனை திருப்பி செலுத்தும் போது முன்பணம் செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக கடனை திருப்பி செலுத்தும் ஆரம்ப கட்டத்தில் வட்டி மட்டுமே அடையும். இந்த நிலையில், ஆரம்ப காலத்தில் கூடுதல் தொகையை மாத தவணையாக செலுத்தும் போது வட்டி குறையும் வாய்ப்பு உள்ளது.

வீட்டுக் கடனில் வரி சலுகைகள்

வீட்டு கடனில் அசல் தொகையை திருப்பி செலுத்துவதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் ரூபாய் 1.50 லட்சம் வரை வரி விலக்கு கோர முடியும். இதே போல வீட்டு கடன் வட்டிக்கும் வரி விலக்கு பெறலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த சில டிப்ஸ்களை பின்பற்றி கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில், அதிக நிதி இழப்பு இல்லாமல் கடனை அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.