தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு சவரன் இவ்வளவா?.. இன்றைய நிலவரம்..
Gold, Silver Rate Today: இந்தியாவில் தங்கத்தின் விலையானது உலகளாவிய மற்றும் உள்ளூர் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் நகைகளுக்கான உள்ளூர் தேவை ஆகியவை தங்கத்தின் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கின்றன.

மாதிரிப் புகைப்படம்
வாரத்தின் முதல் நாளான நேற்று (மார்ச் 09) தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 உயர்ந்து, ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலையானது எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள், தங்க நகை வியாபாரிகள் அச்சம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. தடாலடியாக குறைந்தது!!
பாதுகாப்பான சொத்துகளுக்கு திரும்பும் முதலீட்டாளர்கள்:
தங்கம் பல ஆண்டுகளாக பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பணவீக்கம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது செல்வத்தைப் பாதுகாப்பதில் இது ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் ஏற்பட்ட சந்தை மாற்றங்களுக்கு மத்தியில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் புதிய உச்சத்தை சந்தித்துள்ளன. இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களிடையே அதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதால், புவிசார் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில் ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைய பலர் பாரம்பரிய பாதுகாப்பான சொத்துக்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.
நம்பகமான முதலீடாக திகழும் தங்கம்:
பொருளாதாரத்தில் மோதல் அல்லது நிலையற்ற தன்மை நிலவும் காலங்களில், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கம், பணவீக்க அச்சம் மற்றும் உலகளாவிய நிதி நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றிற்கு எதிராக முதலீட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வதால், விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை கணிசமாக உயரும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஒரு மதிப்புமிக்க உலோகம் என்ற முறையில், தங்கம் பல நூற்றாண்டுகளாக செல்வத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு நம்பகமான பொருளாகவும் இருந்து வருகிறது. இதனால் நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.
இந்தியாவில் எதிரொலிக்கும் தங்கம் விலை:
அந்தவகையில், இந்தியாவில் தங்கத்தின் விலையானது உலகளாவிய மற்றும் உள்ளூர் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் நகைகளுக்கான உள்ளூர் தேவை ஆகியவை தங்கத்தின் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கின்றன. இதன் விளைவாக, இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் பரந்த பொருளாதாரக் காரணிகள் மற்றும் பருவகாலச் சந்தை காரணிகளின் அடிப்படையில் மாறுபடும் விலைகளைக் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் தங்கம் விலை நிலவரம்:
| தேதி | கிராம் | சவரன் |
| 01 மார்ச் 2026 | ரூ.15,775 | ரூ.1,26,200 |
| 02 மார்ச் 2026 | ரூ.15,660 | ரூ.1,25,280 |
| 03 மார்ச் 2026 | ரூ.15,465 | ரூ.1,23,720 |
| 04 மார்ச் 2026 | ரூ.15,200 | ரூ.1,21,600 |
| 05 மார்ச் 2026 | ரூ.15,120 | ரூ.1,20,960 |
| 06 மார்ச் 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
| 07 மார்ச் 2026 | ரூ.15,050 | ரூ.1,20,400 |
| 09 மார்ச் 2026 | ரூ.14,950 | ரூ.1,19,600 |
| 10 மார்ச் 2026 | ரூ.15,050 | ரூ.1,20,400 |
இதையும் படிக்க: போர் நெருக்கடி.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வருமா?
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:
அந்தவகையில், சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 உயர்ந்து, ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.