Gold Price : ஒரே நாளில் இரண்டாவது முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Gold and Silver Price Reduced In Chennai For Second Time | சென்னையில் இன்று காலை தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் இரண்டாவது முறை அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Mar 2026 18:36 PM

 IST

சென்னை, மார்ச் 03 : சென்னையில் இன்று (மார்ச் 03, 2026) தங்கம் விலை (Gold Price) இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.185 குறைந்துள்ளது. ஈரான் போர் பதற்றத்துக்கு மத்தியில் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிரடியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

புவிசார் பதற்றத்துக்கு மத்தியில் குறையும் தங்கம் விலை

பொதுவாக உலக அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகரிக்கும்போது தங்கம் விலை மிக கடுமையாக உயரும். இந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இதில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஈரானும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக புவிசார் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைகீழாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது.

இதையும் படிங்க : SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒரே நாளில் இரண்டாவது முறை அதிரடியாக குறைந்த தங்கம்

தங்கம் விலை இன்று (மார்ச் 03, 2026) காலை அதிரடியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் குறைந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.185 குறைந்துள்ளது. இதன் காரணமாக காலையில் ரூ.15,650-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.15,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல காலையில் ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1,23,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ