ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி.. வரலாறு காணாத உச்சம்.. தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை!

Gold And Silver Price Hit New Record | தங்கம் மற்றும் வெள்ளி இன்று (டிசம்பர் 27, 2025) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி ரூ.20,000 உயர்வை சந்தித்து புதிய உச்சத்தில் விற்பனையகிறது.

ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி.. வரலாறு காணாத உச்சம்.. தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Dec 2025 10:36 AM

 IST

சென்னை, டிசம்பர் 27 : 2025 ஆம் ஆண்டு தங்கத்தை (Gold) போலவே வெள்ளிக்கும் (Silver) சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், வெள்ளியும் தங்கத்திற்கு ஈடாக மிக வேகமாக விலை உயர்ந்து வந்தது. 2025 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவு வரலாற்றின் புதிய உச்சமாக வெள்ளி ஒரே நாளில் ரூ.20,000 உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல தங்கமும் இன்று (டிசம்பர் 27, 2025) ஒரே நாளில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் ரூ.20,000 உயர்வை சந்தித்த வெள்ளி

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே வெள்ளி மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெள்ளி விலை வெறும் ரூ.88,000 ஆக இருந்தது. ஆனால், 2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் வெள்ளி பல மடங்கு விலை உயர்ந்து தற்போது ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த வெள்ளி, இன்று ஒரே நாளில் ரூ.20,000 உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : 2026, ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி (டிசம்பர் 27, 2025) கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி இத்தகைய கடும் விலை உயர்வை சந்தித்து வரும் பட்சத்தில் விரைவில் ரூ.3 லட்சத்தை எட்டும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தங்கம் வாங்க முடியாத சாமானிய மக்கள் வெள்ளியை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது வெள்ளியும் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : Repo Rate : மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் அர்பிஐ?.. யூனியன் வங்கி கணிப்பு!

ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-த்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 27, 2025) தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கமும், வெள்ளியும் இவ்வாறு மாறி மாறி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருவது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?