ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. சேவை பாதிப்பு!

Gig Workers On One Day Strike | பொதுமக்களின் வாழ்க்கையில் ஸ்விக்கி, சோமேட்டோ, அமேசான் உள்ளிட்ட செயலிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த நிலையில், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட கிக் ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. சேவை பாதிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

31 Dec 2025 13:57 PM

 IST

சென்னை, டிசம்பர் 31 : தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ளது தான் கடைசி நேர டெலிவரி செயலிகள் (Last Minute Delivery Apps). இவ்வாறு கடைசி நேரத்தில் வீடு தேடி பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), செப்டோ (Zepto), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட செயலிகள் உள்ளன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த செயலிகள் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டன. இந்த நிலையில், ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட கிக் ஊழியர்கள் (Gig Workers) இன்று (டிசம்பர் 31, 2025) வேலை நிறுத்த போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் செய்லிகள்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் பரபரப்பாக இயங்குகின்றனர். வேலை, குடும்பம் என பலவற்றையும் அவர்கள் ஒரே நேரத்தில் கையாள வேண்டி இருக்கிறது. இவ்வாறு பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் பொதுமக்களின் வேலைகளை குறைப்பதற்காக பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த கடைசி நேர டெலிவரி செயலிகள். பொதுவாக ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், இந்த கடைசி நேர டெலிவரி செயலிகளில் 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க : EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்

இவ்வாறு வீடு தேடி பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அது பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் இந்த செயலிகள் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், இன்று (டிசம்பர் 31, 2025) கிக் ஊழியர்கள் இரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ள கிக் ஊழியர்கள்

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிக் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போடாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். நாளை (ஜனவரி 1, 2026) புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கிக் பணியாளர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதன் மூலம் உணவு மற்றும் இ காமர்ஸ் சேவை பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..