தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.. பட்ஜெட்டில் அறிவிப்பு

Budget 2026: வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்,புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதில், தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.

தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.. பட்ஜெட்டில் அறிவிப்பு

வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை

Updated On: 

01 Feb 2026 13:02 PM

 IST

2026 – 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், தனிநபர்களின் வருமான வரி வரம்பில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளார். புதிய வருமான வரிச்சட்டங்கள் ஏப்.,1 முதல் அமல்படுத்தப்படும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையானதாக மாற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்,புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நிறுவனங்களுக்கும் கால அவகாசம்:

அதேசமயம், குறைவான முறைகேடுகள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று அறிவித்துள்ளார். அதோடு, வாகன விபத்துக்கான இழப்பீட்டிற்கு வரி விலக்கு வழங்கப்படும். விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைக் கொண்டவர்கள் ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். சிறு கட்டணம் செலுத்தி வரி வருமானக் கணக்குகளைத் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில், பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 2025-26 அதே உச்ச வரம்பு நீடிக்கிறது.

புதிய வரி விதிப்பு முறை:

  • ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை 0% வரி
  • ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5% வரி
  • ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15% வரி
  • ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20% வரி
  • ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25% வரி
  • ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி

பழைய வருமான வரிமுறை உச்சவரம்பு:

  • ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை – வரி விதிப்பு இல்லை
  • ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரி
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி
  • ரூ.10 லட்சத்திற்கு மேல் 30% வரி விதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்