வரி உஷார்.. 100% அபராதம் விதிப்பு என பட்ஜெட்டில் எச்சரிக்கை விடுத்த நிர்மலா சீதாராமன்!
Important Announcements On Income Tax In Union Budget 2026 | வரி செலுத்தும் நபர்கள் வருமானத்தை மறைத்தால் சுமார் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் வருமான வரி தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வருமான வரி குறித்து நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (2026 – 2027 Union Budget) தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாத இறுதிக்கு பதிலாக மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வருமானத்தை மறைத்தால் சுமார் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வரி கால்குலேட்டர்
வருமான வரி காலக்கெடு மாற்றி அமைப்பு
2026 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வருமான வரி தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதியாக மாற்றி அமைப்பதாக அறிவித்துள்ளார். இதன்படி, இனி திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
இதையும் படிங்க : தமிழக பாரம்பரியத்தை போற்றும் பட்டுச் சேலை.. 2026 பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த நிர்மலா சீதாராமன் உடை!
100 சதவீத அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
- வருமானம் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வருமானத்தை மறைப்பது உள்ளிட்ட நடவடிகைகளுக்கு சுமார் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் விபத்து உரிமைக்கோரல் தீர்ப்பாயம் வழங்கிய அறிவிப்பால் கிடைக்கும் எந்த ஒரு தொகைக்கும் விதிக்கப்பட்டு வந்த வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
- வெளிநாட்டு சுற்றுலா தொகுப்பு மீது விதிக்கப்படும் டிசிஎஸ் வரி வரம்பு தற்போதுள்ள 5 முதல் 20 சதவீதத்தில் இருந்து வெறும் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- எல்ஆர்எஸ் எனப்படும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் மீதான டிசிஎஸ் தற்போதுள்ள மொத்த 5 சதவீதத்தில் இருந்து வெறும் 2 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : Gas Cylinder Price Hike : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!
வரி விதிப்பு முறைகளில் வந்துள்ள இந்த முக்கிய மாற்றங்கள் சிறந்த பலன்களை பெற உதவியாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.