குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம் – காரணம் என்ன தெரியுமா?
Aadhaar Update : ஆதார் என்பது இந்தியர்களுக்கான மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். குறிப்பாக 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வது மிகவும் அவசியம் . குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் ஏன் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.

மாதிரி புகைப்படம்
ஆதார் (Aadhaar) என்பது இந்தியாவில் அனைவருக்குமான அடையாள ஆவனமாக இருந்து வருகிறது. ஆதார் குறித்த விதிமுறைகளை பின்பற்றாமல் தவிர்ப்பது எதிர்காலத்தில் அரசின் சேவைகளை பெற முடியாமல் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அதன் விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியம். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar) தொடர்பான பல விதிமுறைகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5 மற்றும் 15 வயதுகளை எட்டும் குழந்தைகளின் ஆதார் கார்டில் சில முக்கியமான விஷயங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – முக்கியமான விதிமுறைகள்
இந்தியாவில் ஆதார் கார்டு குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு என தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்கள் சில குறிப்பிட்ட வயதை அடைந்த பின் அதில் சில தகவல்களை கூடுதலாக புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பால் ஆதார் என்ற பெயரில் ஆதார் வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகளின் கைரேகை அல்லது கண் அடையாளம் போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் பெறப்படுவதில்லை, ஏனெனில் அந்த வயதில் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முழுமையாக இருக்காது. இந்த கார்டு குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மேலும், பெற்றோரின் ஆதார் கார்டுடன் இது இணைக்கப்படுகிறது.
பயோமெட்ரிக் புதுப்பிப்பு
ஒரு குழந்தை 5 வயதைக் கடந்தவுடன், அவரது ஆதார் கார்டில் கைரேகை, கருவிழி ஸ்கேன், புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதுவே முழுமையான ஆதார் ஆகும். அதேபோல், குழந்தை 15 வயதைக் கடந்ததும், மீண்டும் அதே பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இந்த நேரத்தில் மீண்டும் புதிய புகைப்படம் சேர்க்கப்படும்
இந்தியாவில் ஆவணங்களின் முக்கியத்துவம்
இந்தியாவில் குடியுரிமை பெற்ற நபர்களுக்கு பல முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. தினசரி வாழ்க்கையில் வேறு வேறு தேவைகளுக்காக இந்த ஆவணங்கள் பயன்படுகின்றன. குறிப்பாக ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவர்ஸ் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை மிக முக்கியம். இவை அனைத்தும் ஆதார் கார்டுகள் மிகவும் அவசியம். ஆதார் கார்டில் உள்ள தவறான தகவல்கள் மேற்குறிப்பிட்ட சேவைகளை பெறுவதில் சிக்கலாகி விடும். எனவே ஆதார் தொடர்பான தகவல்களை புறக்கணிக்காமல் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது.
ஆதார் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தையோ அல்லது UIDAI இணையதளமான uidai.gov.in மூலமாகவோ புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்கென குறிப்பிட்ட சில குறிப்பிட்ட சில ஆவனங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே கேட்கப்படும் ஆவணங்களை சரியாக சமர்பித்து நமது ஆதாரில் தகவல்களை புதுப்பித்துக்கொள்ளலாம்.