Aadhaar : ஜூன் 14 தான் கடைசி தேதி.. அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க.. கெடு விதித்த UIDAI!

Free Aadhaar Card Update | ஆதாரில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய ஜூன் 14, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aadhaar : ஜூன் 14 தான் கடைசி தேதி.. அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க.. கெடு விதித்த UIDAI!

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Jun 2025 00:05 AM

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதாவது, ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அரசாங்க திட்டங்களில் பயன்பெறுவது வரை என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இவ்வளவு முக்கிய ஆவணமாக உள்ள நிலையில், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக தான் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய ஜூன் 14, 2025 கடைசி தேதி என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) அறிவித்துள்ளது.

ஆதார் கார்டில் உள்ல விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும்

ஆதார் கார்டில் பெயர், முகவரி, வயது, பாலினம், கைரேகை, கண் ரேகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தகவல்கள் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 கடைசி தேதியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 14, 2025 தேதிக்கு பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் https://uidai.gov.in/இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
  3. பின்னர் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
  4. அதில் என்ன என்ன விவரங்களை மாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றை மாற்றம் செய்து அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆதார் விவரங்களை மிக சுலபமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.