அமெரிக்காவில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..

US Cargo Plane Crash: கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லி விமான நிலையத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து தீப்பிடித்தது. அந்த பகுதியே அடர்ந்த புகையால் சூழப்பட்டிருந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..

கோப்பு புகைப்படம்

Published: 

05 Nov 2025 10:04 AM

 IST

நவம்பர் 5, 2025: அமெரிக்காவில் ஒரு பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது. கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லி விமான நிலையத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து தீப்பிடித்தது. அந்த பகுதியே அடர்ந்த புகையால் சூழப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் பல கட்டிடங்கள் எரிந்தன. விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு விமானம் 42,000 கேலன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்றது. விமானத்தில் அதிக அளவு எரிபொருள் இருந்ததாலும், அது கட்டிடங்களில் மோதியதாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமான சேவை முடக்கம்:


விமானம் ஒரு தொழில்துறை பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. லூயிஸ்வில்லி மேயர் இதை நம்பமுடியாத சோகம் என்று பதிலளித்தார். விமானத்தில் அதிக அளவு எரிபொருள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, மேலும் பயணிகள் தங்கள் விமான அட்டவணையை கவனமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

3 பேர் உயிரிழப்பு:

அதேவேளை இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்த நிலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.