நாய் என திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட பெண் ஊழியர்.. நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!
Tokyo Company Gave 90 Crores to Employee's Family | ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி நிறுவனம் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த தனது முன்னாள் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.90 கோடி பணம் இழப்பீடாக கொடுத்துள்ளது.

மாதிரி புகைப்படம்
டோக்கியோ, செப்டம்பர் 16 : ஜப்பானின் (Japan) தலைநகர் டோக்கியோவில் (Tokyo) டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தில் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் சடோமி என்ற 25 வயது இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண் 2021 ஆம் ஆண்டு அங்கு பணியில் சேர்ந்த நிலையில், முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக அவர் மீது குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் தலைவர் அந்த பெண்ணை அழைத்து புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விசாரணையின் போது அவர், அந்த பெண்ணை நாய் என்று பொருள்படும் வார்த்தையை கொண்டு திட்டியதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முயன்று கோமாவுக்கு சென்ற இளம் பெண்
நிறுவன தலைவர் திட்டியதால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளம் பெண், 2022 ஜனவரி மாதம் விடுப்பில் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், அவரை மீட்ட அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த பெண் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். நீண்ட காலம் கோமாவில் இருந்த அந்த பெண் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : அறுவை சிகிச்சையின்போது நர்ஸ் உடன் உடலுறவு வைத்த மருத்துவர்.. நோயாளியை தவிக்க விட்ட கொடூரம்!
ரூ.90 கோடி இழப்பீடாக வழங்க கூறிய நீதிமன்றம்
அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டதன் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தங்களது மகளின் மரணத்திற்கு அவர் வேலை பார்த்த நிறுவனமும் அதன் தலைவரும் தான் காரணம் என கூறியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக கருத்தப்பட்ட அந்த நிறுவனம் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.150 மில்லியன் யென் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 90 கோடி ஆகும். பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமன்றி அந்த நிறுவனத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க : திக்திக்.. திடீரென பூங்கா ஊழியரை கடித்து கொன்ற சிங்கக் கூட்டம்.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அவர் பணி செய்த நிறுவனம் ரூ.90 கோடி இழப்பீடு வழங்கியது. அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா செய்த நிலையில், அந்த நிறுவனம் சார்பில் இளம் பெண்ணின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.