டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா.. மாலையில் தரையிரங்குகிறார்!

Shubhanshu Shukla and his Team Returning to Earth | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது 4 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு புறப்பட்டார். இந்த நிலையில் 18 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் தனது குழுவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புகிறார்.

டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா.. மாலையில் தரையிரங்குகிறார்!

சுபான்ஷு சுக்லா

Updated On: 

15 Jul 2025 07:52 AM

சென்னை, ஜுலை 15 : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) 18 நாட்கள் ஆய்வு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டுள்ளார். சுக்லாவின் விண்வெளி பயணம் முடிவடைந்த நிலையில் அவர் தனது 4 பேர் கொண்ட குழுவுடன் பூமிக்கு திரும்புகிறார். இவர்கள் ஜூலை 14, 2025 மாலை 4.45 மணிக்கு விண்வெளியில் இருந்து புறப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 15, 2025) பூமியில் தரையிறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவின் பூமி திரும்பும் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

18 நாட்கள் ஆய்வு பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லா

ஆக்சியம் – 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல மூன்று விண்வெளி வீரர்களுடன் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர்கள் நான்கு பேரும் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் உள்ள ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் ஜூன் 27, 2025 அன்று விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 28 மணி நேரம் பயணம் செய்து ஜூன் 26, 2025 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து அறுபது ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பூமிக்கு திரும்ப புறப்பட்டுள்ளனர்.

குழுவுடன் பூமிக்கு புறப்பட்ட சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரும் சர்வதேச வின் நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் நேற்று (ஜூலை 14, 2025) மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். இந்த டிராகன் விண்கலம் இன்று (ஜூலை 15, 2025) மதியம் 2.40 மணியளவில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் நுழையும். அப்போது அதன் வேகம் மணிக்கு 27 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். இதனை அடுத்து இந்திய நேரப்படி பகல் 2.53 மணி அளவில் டிராகன் விண்கலத்தில் உள்ள இரண்டு சிறிய டுரோக் பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.50 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கும்.

இதையும் படிங்க : ‘நாடு கடத்துவோம்’ இந்தியர்களுக்கு அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை.. இந்த தவறை பண்ணாதீங்க!

இது விண்கலத்தை 156 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து வெறும் 53 கிலோ மீட்டர் வேகமாக குறைக்கும். இதனைத் தொடர்ந்து நான்கு பெரிய பாராசூட்டுகள் விரிந்து டிராகன் விண்கலத்தின் வேகத்தை வெறும் ஏழு கிலோமீட்டர் ஆக குறைக்கும். இந்த நிலையில் பகல் 3 மணிக்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் டிராகன் விண்கலம் பசுபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

Related Stories
Shubhanshu Shukla: வெற்றிகரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம்.. வெற்றி நாயகனாக திரும்பிய சுபன்ஷூ சுக்லா..!
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு.. பின்னணி என்ன? வெளியான தகவல்கள்
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுக்க ஏமன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர பேச்சுவார்த்தை: கருணைக்கு ஒரு கடைசி வாய்ப்பு!
கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!
ஆண்மை நீக்கம், ஆயுள் தண்டனை.. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை!
அயர்லாந்து: 796 குழந்தைகள் கழிவுநீர் குழிக்குள் புதைக்கப்பட்ட கொடூர உண்மை!