ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு.. கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் பொதுமக்கள்!
Heavy Snowfall In Russia In 60 Years | தற்போது பனிக்காலம் நிலவி வருவதால் உலகின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

ரஷ்யா பனிப்பொழிவு
ரஷ்யா, ஜனவரி 20 : டிசம்பர், ஜனவரி மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நிலவும். அந்த வகையில், இந்த ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. ஆனால், மற்ற பகுதிகளை விட ரஷ்யா (Russia) மிகக் கடுமையான பனிப்பொழிவை எதிர்க்கொண்டு வருகிறது. அதாவது அங்கு கடந்த 60 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத அளவு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா பனிப்பொழிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யாவை உலுக்கும் கடும் பனிப்பொழிவு
வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவி நிலவும். ஆனால், இந்த ஆண்டு அங்கு வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவு காரணமாக சாலைகள், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு போக்குவரத்து சவால் மிகுந்ததாக மாறியுள்ளது. வீடுகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் வெண்பனியால் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தனது நோபல் பரிசை டிரம்புக்கு பரிசளித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்!
60 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு
The “Snow Apocalypse” is real in Russia right now. ❄️🇷🇺
A record-breaking storm has buried the Kamchatka Peninsula under 7 feet of snow.#snow pic.twitter.com/0qp9XEdLOx
— Impactful Insights (@ImpactfulIn) January 19, 2026
ரஷ்யாவில் வீடுகள் மட்டுமன்றி அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெண்பனி முழுவதுமாக மூடியுள்ளது. அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ச்சியாக பனி பொழிந்து வருவதாக ரஷ்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றும், இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : பிறந்த குழந்தைக்கு நேர்ந்த சோதனை…செவிலியர் செய்த கவனக்குறைவான செயல்!
ரஷ்யாவில் 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகக் கடுமையான பனிப்பொழிவுகளில் இதுவும் ஒன்று என்று ரஷ்ய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.